Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கையெல்லாம் அரிக்குது பாஸ்... வினோத் காம்ப்ளி

மும்பை: மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் பார்த்து ரசித்த முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி, மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் போல கைகள் அரிப்பதாக கூறியுள்ளார்.

தனது மகன் ஜீசஸ் கிறிஸ்டியானோவுடன் இணைந்து வாங்கடே மைதானத்தில் நடந்த மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான போட்டியை ரசித்துப் பார்த்தார் காம்ப்ளி.

2011ம் ஆண்டு கிரி்க்கெட்டுக்கு குட்பை சொன்ன காம்ப்ளி இந்தப் போட்டி குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவிக்கும்போது எனக்கு கையெல்லாம் அரிக்குது என்று கூறியிருந்தார்.

பழக்க வழக்கத்தால் கெட்ட திறமையாளர்

பழக்க வழக்கத்தால் கெட்ட திறமையாளர்

வினோத் காம்ப்ளி மிகச் சிறந்த, திறமையான பேட்ஸ்மேன் ஆவார். ஆனால் அவரிடமிருந்த சில கெட்ட பழக்கங்கள் அவரை சீக்கிரமே வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டது.

44 வயதில்

44 வயதில்

தற்போது காம்ப்ளிக்கு 44 வயதாகிறது. அவரது பெயர் ஊடகங்களில் அடிபடும்போதெல்லாம் ஏதாவது சர்ச்சையாக இருக்கிறது. அந்த அளவுக்கு ரிப்பேராகிக் கிடக்கிறது அவரது பெயர்.

ஸ்டிரோக் பிளேயர்

ஸ்டிரோக் பிளேயர்

அருமையான இடது கை அதிரடி ஆட்டக்காரர் காம்ப்ளி. 17 வயதில் சச்சினுடன் இணைந்து பள்ளிகளுக்கு இடையிலான போட்டி ஒன்றில் 664 ரன்களைக் குவித்து உலக சாதனை படைத்தவர் காம்ப்ளி. தொடர்ந்து இந்திய அணியிலும் இடம் பெற்றார். ஆனால் பாதை மாறிப் போனார்.

மும்பை இந்தியன்ஸ் ஆட்டத்தைப் பார்க்க

இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு நடந்த மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான போட்டியைப் பார்க்க தனது மகன் ஜீசஸுடன் வந்திருந்தார் காம்ப்ளி.

கைகள் அரிக்கின்றன

இந்தப் போட்டியில் கவுதம் கம்பீர் அட்டகாசமாக ஆடி ரன்களைக் குவித்ததை பார்த்து ரசித்தார் காம்ப்ளி. இதுகுறித்து டிவிட்டரில் அவர் கூறுகையில் போட்டியைப் பார்க்கும்போது எனது கைகள் அரிக்கின்றன (மீண்டும் விளையாட) என்று கூறியிருந்தார்.

டெஸ்ட் சாதனை

டெஸ்ட் சாதனை

காம்ப்ளி ஒரு நாள் போட்டிகளில் மட்டுமல்லாமல் டெஸ்ட் போட்டிகளிலும் கூட அதிரடியாக ஆடியவர். சச்சின் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி 3 ஆண்டுகள் கழித்துத்தான் அறிமுகமானார் காம்ப்ளி. ஆனால் சச்சின் செய்யாத சாதனையை இவர் செய்தார்.

7 போட்டிகளில் நான்கு சதம்

7 போட்டிகளில் நான்கு சதம்

தனது முதல் 7 டெஸ்ட் போட்டிகளில் நான்கு சதம் போட்டவர் காம்ப்ளி. அதிலும், 2 முறை இரட்டை சதமும் போட்டு அசத்தியவர். ஷான் வார்னே பந்து வீச்சில் ஒருமுறை ஒரே ஓவரில் 22 ரன்களைக் கொளுத்தியவர். அவரது புட் ஒர்க் பிரமாதமாக இருக்கும்.

2 ஆண்டுகள்தான்

2 ஆண்டுகள்தான்

காம்ப்ளியின் டெஸ்ட் வாழ்க்கை 2 ஆண்டுகள்தான். 17 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். அவர் கடைசியாக 1995ம் ஆண்டு தனது கடைசி டெஸ்ட் போட்டியை ஆடியபோது அவரது வயது வெறும் 24தான்.

104 ஒரு நாள் போட்டிகள்

104 ஒரு நாள் போட்டிகள்

104 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ள காம்ப்ளி, அதில் 2 சதம், 14 அரை சதங்களை எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் அவர் ஆடியதில்லை. 2011ல் அவர் ஓய்வை அறிவித்தார்.

Story first published: Monday, May 2, 2016, 12:21 [IST]
Other articles published on May 2, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+