For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னோட வேலை முடிஞ்சுடுச்சு... பாண்டிங் வேலை தொடங்கிடுச்சு... டெல்லி பௌலர் சொல்லியிருக்காரு!

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 138 ரன்களை எதிரணிக்கு இலக்காக கொடுத்துள்ளது.

இந்த போட்டியில் சிறப்பாக பௌலிங் செய்த டெல்லி அணியின் பௌலர் மிஸ்ரா, கோச் ரிக்கி பாண்டிங்கிற்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

அடுத்தடுத்த 4 விக்கெட்டுகளை வீழ்த்திய டெல்லி பௌலர்... 38 வயசுலயும் ரோகித்துக்கு எதிரா சாதனை!அடுத்தடுத்த 4 விக்கெட்டுகளை வீழ்த்திய டெல்லி பௌலர்... 38 வயசுலயும் ரோகித்துக்கு எதிரா சாதனை!

13வது போட்டி

13வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 13வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இலக்காக கொடுத்துள்ளது.

4 விக்கெட்டுகளை வீழ்த்திய மிஸ்ரா

4 விக்கெட்டுகளை வீழ்த்திய மிஸ்ரா

இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் அமித் மிஸ்ரா சிறப்பாக செயல்பட்டு 4 முக்கிய விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினார். ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் மற்றும் கீரன் பொல்லார்ட் என அவர் வீழ்த்திய 4 விக்கெட்டுகளும் மும்பையின் முக்கிய விக்கெட்டுகள்.

4வது போட்டி

4வது போட்டி

இதையடுத்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து திக்கி திணறி மும்பை வீரர்கள் 137 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து சென்னை பிட்ச்சில் தனது 4வது போட்டியை விளையாடி வருகிறது. ஆனால் டெல்லி கேபிடல்ஸ் அணி தனது முதல் போட்டியை இன்றுதான் துவங்கியுள்ளது.

பிட்ச்சிற்கு தயாரான டெல்லி அணி

பிட்ச்சிற்கு தயாரான டெல்லி அணி

ஆயினும் அதன் வீரர்கள் சென்னை பிட்ச்சிற்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொண்டு சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக மிஸ்ரா 4 விக்கெட்டுகளை தனது 4 ஓவர்களில் அடுத்துடுத்து வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் இந்த ஓவர்களில் 24 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளார்.

எதிரணிக்கு நெருக்கடி

எதிரணிக்கு நெருக்கடி

தான் எப்போதும் விக்கெட்டுகளை வீழ்த்துவது குறித்தே சிந்தித்து வருவதாகவும் சரியான இடங்களில் பௌலிங் செய்ய முயற்சிப்பதாகவும் மிஸ்ரா கூறியள்ளார். எப்போது டி20 போட்டிகளில் பௌலிங் செய்தாலும் விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

துவங்கிய பாண்டிங் வேலை

துவங்கிய பாண்டிங் வேலை

தான் எப்போதும் தன்னுடைய பௌலிங் ஸ்டைலை மாற்றிக் கொள்ளாமல் தன்னுடைய வலிமையை பயன்படுத்தி பந்துவீச முயற்சிப்பதாகவும் மிஸ்ரா கூறியுள்ளார். அணியில் சிறப்பான பேட்டிங் அட்டாக் உள்ள நிலையில், தன்னுடைய வேலை முடிந்து விட்டதாகவும் தற்போது பாண்டிங்கின் வேலை துவங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Story first published: Tuesday, April 20, 2021, 23:05 [IST]
Other articles published on Apr 20, 2021
English summary
With the batting attack we have, I think we can chase it but we have to bat smartly -Mishra
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X