மைகேல் நடத்தும் ஐபிஎல் பான்டசி கிரிக்கெட் லீக்.. இது வேற லெவல் டிப்ஸ்!

Posted By:

சென்னை: மைகேல் இணையதள பக்கம் நடத்தும் ஐபிஎல் பான்டசி கிரிக்கெட் லீக் போட்டியில் வெற்றிபெற இந்த விஷயங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும். வரும் சனிக்கிழமை சென்னை அணிக்கும், மும்பை அணிக்கும் இடையில் முதல் ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது.

மூன்று முறை கோப்பை வென்ற மும்பை அணிக்கும், இரண்டு முறை கோப்பை வென்ற சென்னை அணிக்கும் இடையில் நடக்கும் இந்த போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அணி இரண்டு வருடத்திற்கு பின் விளையாடுவதால் இந்த முறை கோப்பை வெல்லும் முனைப்பில் உள்ளது.

அதே சமயம் மும்பை தன்னிடம் இருக்கும் கோப்பையை இந்த முறை விட்டுக்கொடுக்கும் எண்ணத்தில் இல்லை. எப்படியாவது கோப்பையை தக்க வைக்க பயிற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் இந்த போட்டி பற்றிய மைகேல் இணையதள பக்கம் நடத்தும் பான்டசி கிரிக்கெட் லீக் போட்டியில் வெல்ல சில வழிமுறைகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

நல்ல தேர்வு

நல்ல தேர்வு

இதில் குறைந்த விலையில் ஒரு வீரரை எடுக்க நினைத்தால் கண்டிப்பாக மும்பை வீரர் இஷான் கிஷானை எடுக்கலாம். மிக குறைந்த காலத்தில் இவர் கிரிக்கெட் உலகில் முக்கியமான கீப்பராக உருவெடுத்து இருக்கிறார். இந்த ஐபிஎல் போட்டியில் அதிக எதிர்பார்ப்பிற்கு இவர் உள்ளாகி உள்ளார். இவர் வெறும் 8 சாலரிக்களுக்கு கிடைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன், துணை கேப்டன்கள்

கேப்டன், துணை கேப்டன்கள்

மிஸ்டர் ஐபிஎல் என்று செல்லப்பெயர் வைத்து அழைக்கப்படும் சின்ன தல சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டிகளில் கில்லி. இப்போது வரை ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர் இவர்தான். இந்திய அணிக்கு புதிதாக திரும்பி இருக்கும் இவர் புதிய உத்வேகத்தில் இருக்கிறார். கடைசி ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்காக இவர் எடுத்த 442 ரன்களே மிக அதிக ரன்கள் ஆகும். இவர் 4.18 ஆவரேஜ் மற்றும் 144 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். அதேபோல் ஷேன் வாட்சன் இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறார். இவர் மட்டுமே இரண்டு முறை 2008 மற்றும் 2013ல் தொடர் ஆட்ட நாயகன் விருது வாங்கியுள்ளார். இவர் முரளி விஜயுடன் தொடக்க வீரராக இறங்க உள்ளார்.

சிறந்த தேர்வு யார்

சிறந்த தேர்வு யார்

அதேபோல் சென்னை அணியில் இம்ரான் தாஹிர் சிறந்த தேர்வாகும். மிக லேட்டாக வந்து இருந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்து இருக்கிறார். இவர் தனது 32 ஐபிஎல் போட்டியில் 47 விக்கெட் எடுத்துள்ளார். இவர் 24.46 ஆவரேஜ் வைத்துள்ளார். அதேபோல் 8.21 எக்கனாமி வைத்துள்ளார். இதனால் இவர் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

மோசம்

மோசம்

அதே சமயத்தில் சென்னை அணி எடுத்து இருக்கும் ஷரத்துல் தாக்குர் மோசமான தேர்வு என்று கூறலாம். கடைசியாக நடந்த நிதாஸ் கோப்பை போட்டியில் இவர் மோசமாக ஆடியுள்ளார். இவரது பான்டசி புள்ளிகளும் மிகவும் குறைவாகும். இவர் தனது ஸ்லோ பந்துகள் மூலம் எதிரணி வீரர்களை திணறடிப்பார், ஆனாலும் அதிக ரன் கொடுத்து சமயங்களில் சொதப்புகிறார். இவரை நீங்கள் தேர்ந்தெடுக்காமல் இருப்பது நல்லது.

உதாரணம்

உதாரணம்

உதாரணத்திற்கு இந்த அணி தேர்வு, உங்கள் பான்டசி லீக்கிற்கு சிறந்ததாக இருக்கும். சுரேஷ் ரெய்னா, ஷேன் வாட்சன், இஷான் கிஷான், இம்ரான் தாஹிர், ரோஹித் சர்மா, ஏவின் லெவிஸ், பும்ரா, கே எம் ஆசிப், பேட்ரிக் கும்மின்ஸ், குருணால் பாண்டியா, கேதார் ஜாதவ்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
My Khel Fantasy Tips - Mumbai vs Chennai on April 7.
Story first published: Thursday, April 5, 2018, 19:41 [IST]
Other articles published on Apr 5, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற