Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அங்கு அவர் விளாசும் போது இங்கு இவர் ஹோட்டலில் இருப்பதா? ரொடேஷன் பாலிசி குறித்து ஹுசைன் அதிருப்தி

அகமதாபாத்: 3வதுட் டெஸ்டில் இங்கிலாந்து தோல்வியடைந்த நிலையில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மீது முன்னாள் வீரர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து மோசமான தோல்வியை பெற்றது. இதனால் இங்கிலாந்து அணி தேர்வு சரியில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து ரொட்டேஷன் பாலிசி குறித்து அந்நாட்டின் முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

டெஸ்ட்

டெஸ்ட்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி படு தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு பிட்ச் தான் காரணம் என ஒரு புறம் விமர்சனங்கள் வலுத்து வந்த நிலையில் 4வது டெஸ்ட் தோல்விக்கு காரணம் இங்கிலாந்து அணியின் ரொட்டேஷன் பாலிசி தான் என முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பண்ட்

பண்ட்

அகமதாபாத்தில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். இந்திய அணி 80 / 4 என தடுமாறிய நிலையில் இளம் வீரர் ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி சதமடித்து இந்தியாவின் வெற்றிக்கு உதவினார்.

ஹுசைன் குற்றச்சாட்டு

ஹுசைன் குற்றச்சாட்டு

இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் நாசர் ஹுசைன், இங்கிலாந்தின் மிகப்பெரிய பிரச்னை, ரொட்டேஷன் பாலிசியோ, அணி தேர்வோ கிடையாது. பிரச்னை என்னவென்றால் ஒரு வருட காலக்கட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் 17 டெஸ்ட் போட்டிகள், டி20 உலகக்கோப்பை, ஐபிஎல் தொடர் வீரர்கள் பங்கேற்பதே ஆகும். இதனால் ரொட்டேஷன் பாலிசியில் வீரர்கள் சென்று விடுகிறார்கள். இது மிகவும் கஷ்டமான ஒன்று என தெரிவித்துள்ளார்.

காலமுண்டு

காலமுண்டு

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வீரர்களின் நலனை கருதி ரொட்டேஷன் செய்கிறது. ஆனால் அதற்கு ஒரு நேரம் இது கிடையாது. இங்கிலாந்திற்கு டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியமான ஒன்று. அதில் தோல்வியை பெற வாய்ப்பை ஏற்படுத்தி தரக்கூடாது. ரிஷப் பண்ட் அங்கு சதமடித்து கொண்டிருக்க, அவரை போன்ற வீரரான ஜோஸ் பட்லர், இங்கு ரொட்டேஷன் பாலிசியால் ஹோட்டல் ரூம்மில் உள்ளார் என ஹுசைன் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, March 9, 2021, 19:38 [IST]
Other articles published on Mar 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+