சிரித்தபடி வந்த நடராஜன்.. வேகமாக வந்து கட்டிப்பிடித்த ரோஹித் சர்மா.. அட.. என்ன பாஸ் இதெல்லாம்!
சிட்னி: இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா தற்போது தமிழக வீரர் நடராஜன் உடன் மிகவும் நெருக்கமாகி உள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இருந்து கேப்டன் கோலி விலகி உள்ள நிலையில் தற்போது மொத்த வீரர் ரோஹித் சர்மா அணியில் இணைந்து இருக்கிறார்.
இந்திய வீரர் ரோஹித் சர்மா தனது பிட்னஸை நிரூபித்துவிட்டு தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீதம் இருக்கும் போட்டியில் கலந்து கொள்ள இவர் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

இணைந்தார்
தற்போது ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்டு, தற்போது இந்திய அணியில் இணைந்துள்ளார். நேற்று முதல்நாள் இவர் இந்திய அணியுடன் இணைந்தார். நேற்று ரோஹித் சர்மா தனது பயிற்சியை தொடங்கினார்.

பயிற்சி
இந்த நிலையில் இந்திய அணியில் இணைந்த ரோஹித் சர்மாவை சக வீரர்கள் அன்போடு வரவேற்றனர். மீண்டும் அணிக்குள் வந்த ரோஹித் சர்மாவிற்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அணிக்குள் வந்த ரோஹித் சர்மா, நேராக சென்று நடராஜனை சந்தித்து நீண்ட நேரம் பேசி உள்ளார்.

நடராஜன்
நடராஜனிடம் தனியாக ரோஹித் சர்மா பேசி உள்ளார். நடராஜனை கட்டிப்பிடித்து , அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நீங்கள் சிறப்பாக ஆடி வருகிறீர்கள், இப்படியே தொடருங்கள் என்று நடராஜனுக்கு ரோஹித் சர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாழ்த்து தெரிவித்தார்
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுடன் நடராஜன் நெருக்கமாகி வருகிறார். பும்ரா, பாண்டியா இருவரும் நடராஜனுக்கு நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர். இந்த நிலையில்தான் தற்போது ரோஹித் சர்மாவும் நடராஜனுக்கு நெருக்கமாகி உள்ளார். நடராஜனை டெஸ்ட் அணியில் சேர்க்கும் விருப்பத்தில் ரோஹித் சர்மா இருக்கிறார் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications