Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யார்கிட்டயும் அதிகமா பேசமாட்டார்..... சைலண்டா இருப்பாரு ஆனா கடின உழைப்பாளி... ரஷீத் கான் புகழ்ச்சி

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் 3வது போட்டியில் இன்றைய தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சிறப்பான வீரர்கள் ரஷீத் கான், நடராஜன் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் அணியில் நடராஜன் செயல்பாடுகள் குறித்து ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர் ரஷீத் கான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

எஸ்ஆர்எச் -கேகேஆர் மோதல்

எஸ்ஆர்எச் -கேகேஆர் மோதல்

ஐபிஎல் 2021 தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இன்றைய தினம் சென்னையில் நடைபெறவுள்ள போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதவுள்ளது. எஸ்ஆர்எச் அணியில் ரஷீத் கான், நடராஜன் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகிய சிறப்பான பௌலர்கள் காணப்படுகின்றனர்.

ப்ளே-ஆப்பிற்கு முன்னேற்றம்

ப்ளே-ஆப்பிற்கு முன்னேற்றம்

கடந்த சீசனில் ப்ளே ஆப் சுற்றிற்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதி தோற்றது. இதையடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த சீசனில் எஸ்ஆர்எச் மிகவும் வலிமையாக களமிறங்கியுள்ளது.

அதிரடி பௌலர்கள்

அதிரடி பௌலர்கள்

கேப்டன் டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ, திறமை வாய்ந்த கேன் வில்லியம்சன், பௌலர்கள் ரஷீத் கான், நடராஜன் மற்றும் கடந்த சீசனில் காயம் காரணமாக விலகிய புவனேஸ்வர் குமார் ஆகிய முக்கிய வீரர்களுடன் இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியுள்ளது. முதல் போட்டியில் இன்றைய தினம் கேகேஆர் அணியுடன் மோதவுள்ளது.

ரஷீத்கான் பாராட்டு

ரஷீத்கான் பாராட்டு

கடந்த சீசனில் ரஷீத் கான் 20 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் அணியின் நடராஜன் 16 விக்கெட்டுகளை இரண்டாவது வீரராக வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் நடராஜன் மிகவும் திறமைமிக்க வீரர் மற்றும் கடுமையான உழைப்பாளி என்று ரஷீத் கான் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அவர் அதிகமாக பேசமாட்டார் என்றும் சைலண்டாக இருப்பார் என்றும் கூறியுள்ளார்.

நடராஜன் ஆட்டத்தை காண ஆவல்

நடராஜன் ஆட்டத்தை காண ஆவல்

கடந்த சீசனில் நடராஜனின் பௌலிங் மிகவும் சிறப்பாக அமைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரிலும் நடராஜனின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் ரஷீன் கான் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த சீசனில் அவரது ஆட்டத்தை பார்க்க தான் மிகுந்த ஆவலுடன் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Sunday, April 11, 2021, 20:07 [IST]
Other articles published on Apr 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+