Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யார்க்கர் கிங்கிடமிருந்து... யார்க்கர் கிங்கிற்கு... நடராஜனுக்கு என்னதான் கொடுத்தாரு பும்ரா?

கேன்பெரா : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டி துவங்கியுள்ளது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பௌலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

போட்டிக்கு முன்னதாக தன்னுடைய இந்திய டி20 கேப்பை ஜஸ்பிரீத் பும்ராவிடம் இருந்து டி நடராஜன் பெற்றுக் கொண்டார்.

Natarajan Gets His T20 Cap of India From Jasprit Bumrah

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையில் நடைபெற்று முடிந்துள்ள ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 2க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் 3 போட்டிகளை கொண்ட டி20 தொடர் இன்று துவங்கியுள்ளது. போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்த போட்டி மூலம் தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் களமிறங்குகிறார் இடதுகை பந்துவீச்சாளர் நடராஜன். போட்டி துவங்குவதற்கு முன்னதாக நடராஜனுக்கு அணியின் முன்னணி பௌலிர் ஜஸ்பிரீத் பும்ரா டி20 இந்திய அணிக்கான கேப்பை அளித்தார். உடனிருந்த வீரர்கள் கைத்தட்டி ஆரவரித்தனர். யார்க்கர் கிங் பும்ராவிடம் இருந்து பெருமிதத்துடன் கேப்பை பெற்றுக் கொண்டார் யார்க்கர் கிங் நடராஜன். பிசிசிஐ இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Story first published: Friday, December 4, 2020, 15:35 [IST]
Other articles published on Dec 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+