Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மனதை மாற்ற வைத்த நடராஜன்.. பவுலிங், பீல்டிங், பேட்டிங்கிலும் கில்லி.. குழப்பமடைந்த பயிற்சியாளர் குழு

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடக்க உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் நடராஜன் ஆடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். இரண்டு நாட்களாக பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலையில் தற்போது மீண்டும் இந்திய வீரர்கள் பயிற்சியை தொடங்கி உள்ளனர்.

இந்த பயிற்சியாளர்கள் குழு ஒவ்வொரு வீரர்களுக்கும் தனித்தனியாக தீவிரமாக பயிற்சி அளித்து வருகிறார்கள்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடக்க உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் நடராஜன் ஆடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்கிறார்கள். தற்போது இந்திய அணியில் உமேஷ் யாதவ் இடம்பெறவில்லை. காயம் காரணம் இவர் அணியில் இடம்பெறவில்லை.

மாற்று

மாற்று

இவருக்கு மாற்றாக ஆடும் 11 பேர் கொண்ட அணியில் ஷரத்துல் தாக்கூர் அல்லது நடராஜன் இறங்க வேண்டும். அனுபவம் என்ற வகையில் பார்த்தால் ஷரத்துல் அணியில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. ஷரத்துல் தாக்கூருக்கு ஆதரவாக தேர்வாளர்கள் குழுவிலும் பலர் நிலைப்பாடு எடுத்துள்ளனர்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இன்னொரு பக்கம் நடராஜன் தனது சிறப்பான பயிற்சி மூலம் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். இவர் பவுலிங் , பீல்டிங், பேட்டிங் என்று அனைத்திலும் கலக்குகிறார். பவுலிங்கில் இவர் யார்க்கர் மட்டுமே போடுவார் என்று நிலவி வந்த கருத்தை அடித்து காலி செய்துள்ளார்.

வலைபயிற்சி

வலைபயிற்சி

இதுவரை வலைப்பயிற்சியில் நடராஜன் இன் ஸ்விங், அவுட் ஸ்விங், பவுன்சர் என்று வகைவகையாக பவுலிங் செய்துள்ளார். பீல்டிங்கிலும் வேகமாக செயல்பட்டுள்ளார். இவர் கேட்ச் பிடிக்கும் வீடியோக்களை பிசிசிஐ அமைப்பே வெளியிட்டு பாராட்டி இருந்தது.

பாராட்டு

பாராட்டு

இந்த நிலையில் இவர் சில மணி நேரம் பேட்டிங் பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார். பேட்டிங் பயிற்சியிலும் இவர் பெரிய அளவில் கவனம் ஈர்த்து இருக்கிறார். இவரின் பேட்டிங் டெக்னிக் கவனிக்கத்தக்க வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஷரத்துல் தாக்கூருக்கு பதிலாக நடராஜனை அணியில் எடுக்கலாமா என்று பிசிசிஐ ஆலோசனை ஈடுபட்டு வருகிறது.

Story first published: Monday, January 4, 2021, 14:33 [IST]
Other articles published on Jan 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+