Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தாய் மண்ணில் இறங்க போகிறார்.. உற்று கவனிக்கும் பிசிசிஐ.. நடராஜனுக்கு காத்திருக்கும் பெரிய வாய்ப்பு!

சிட்னி: இந்திய அணியின் இளம் அறிமுக வீரர் நடராஜன் அடுத்த வருடம் நடக்க உள்ள கிரிக்கெட் போட்டிகளில் முக்கிய பங்கு வகிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்திய அணியின் மிக முக்கியமான வீரர்களில் ஒருவராக நடராஜன் உருவெடுத்து வருகிறது. அறிமுக கிரிக்கெட் தொடரில் சிறப்பாக ஆடிய இவர் தேர்வாளர்கள் கவனத்தை ஈர்த்து உள்ளார்.

அதிலும் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் இவர் ஆடிய விதம் பலருக்கும் நம்பிக்கை அளித்துள்ளது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் அடுத்த வருடம் நடக்க உள்ள முக்கியமான கிரிக்கெட் போட்டிகளில் எல்லாம் நடராஜன் ஆடுவார் என்று கூறப்படுகிறது. இவரின் ஆட்டத்தை பார்த்து பிசிசிஐ பெரிய அளவில் நம்பிக்கை கொண்டு உள்ளது. இவருக்கு அதிகமாக வாய்ப்பு கொடுத்து இந்திய அணியில் இவரை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல பிசிசிஐ திட்டமிட்டு உள்ளது.

புதிய உயரம்

புதிய உயரம்

அதன்படி ஆஸ்திரேலிய தொடருக்கு பின் இந்தியா இங்கிலாந்து இடையே கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. இங்கிலாந்திற்கு எதிராக நடைப்பெற உள்ள கிரிக்கெட் தொடரில் இரண்டு முக்கியமான போட்டிகள் சென்னையில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் பிப்ரவரி 5ம் தேதி நடக்கும். இரண்டாவது டெஸ்ட் போட்டியும் சென்னையில் 13ம் தேதி நடக்க உள்ளது.

எப்படி

எப்படி

3வது டெஸ்ட் போட்டி 24ம் தேதி பிப்ரவரி மாதம் நடக்க அஹமதாபாத்தில் உள்ளது. 4வது டெஸ்ட் போட்டி 4ம் தேதி மார்ச் மாதம் அஹமதாபாத்தில் நடக்க உள்ளது. அதன்பின் டி 20 தொடர் முழுக்க மார்ச் 12 முதல் 20ம் தேதி வரை அகமதாபாத்தில் நடக்க உள்ளது.இந்த தொடருக்கான இந்திய அணியில் நடராஜனை சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

பிசிசிஐ திட்டம்

பிசிசிஐ திட்டம்

அதிலும் இந்த தொடர் இந்திய பிட்சில் நடப்பதால் நடராஜன் அதிக அளவில் சாதிக்க வாய்ப்புகள் உள்ளது. 2021ல் நடக்க உள்ள டி 20 உலகக் கோப்பை தொடருக்கு நடராஜனை தேர்வு செய்யும் விதமாக அவரை வைத்து சோதனைகளை செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதனால் 2021ல் நடக்க போகும் பல்வேறு கிரிக்கெட் தொடர்களில் நடராஜன் அதிக பங்கு வகிப்பார் என்று கூறுகிறார்கள்.

நிலைமை என்ன

நிலைமை என்ன

இதெல்லாம் போக இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடக்கிறது. இந்த டெஸ்ட் போட்டிகளில் நடராஜனை களமிறக்கவும் பிசிசிஐ ஆலோசனை செய்து வருகிறது. டெஸ்ட் அணியில் வீரர்கள் சரியாக ஆடாத நிலையில் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கி பார்க்கலாமா என்று பிசிசிஐ ஆலோசனை செய்து வருகிறது.

Story first published: Monday, December 21, 2020, 10:58 [IST]
Other articles published on Dec 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+