Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யார்க்கர் கிங்கிற்கு வந்த சோதனை... ஐபிஎல் 2021 தொடர்ல இருந்தே நீக்கப்பட்டுருக்காரு!

டெல்லி : ஐபிஎல் 2021 தொடரின் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார் தமிழக வீரர் நடராஜன்.

இதுவரை இந்த தொடரில் 2 போட்டிகளில் விளையாடியுள்ள நடராஜன் முட்டியில் ஏற்பட்ட காயத்தால் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடவில்லை.

இந்நிலையில் அவரது காயம் குறித்த அதிர்ச்சி தகவலை அந்த அணி வெளியிட்டுள்ளது.

யார்க்கர் கிங் நடராஜன்

யார்க்கர் கிங் நடராஜன்

ஐபிஎல் 2021 தொடரின் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் தமிழக வீரர் நடராஜன். கடந்த சீசனில் சிறப்பாக விளையாடிய இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜனுக்கு, அதன்மூலம் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடர்களிலும் வாய்ப்புகள் கிடைத்தது. அதிலும் தன்னை நிரூபித்தார்.

நடராஜன் அவதி

நடராஜன் அவதி

இதனிடையே கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் அவருக்கு முட்டியில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த காயம் காரணமாக நடராஜன் அவதியுற்று வருகிறார். இந்த ஐபிஎல் 2021 சீசனில் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடியுள்ளார்.

டேவிட் வார்னர் அறிவிப்பு

டேவிட் வார்னர் அறிவிப்பு

இதுவரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்நிலையில் இறுதி இரண்டு போட்டிகளில் நடராஜனுக்கு பதிலாக கலீல் அகமது விளையாடினார். நேற்றைய தனது முதல் வெற்றியை அடுத்து சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர், நடராஜனுக்கு முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு ஸ்கேன் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அணி நிர்வாகம் அறிவிப்பு

அணி நிர்வாகம் அறிவிப்பு

இதையடுத்து அவர் பயோ பபுளை உடைத்து வெளியில் சென்று ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றும் மீண்டும் அணியின் பபுளில் இணைய 7 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபட வேண்டும். இந்நிலையில் அவர் தொடர்ந்து இந்த தொடரை விளையாட மாட்டார் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சன்ரைசர்ஸ் முடிவு

சன்ரைசர்ஸ் முடிவு

இதையடுத்து அவருக்கு பதிலாக விளையாடும் வீரர் குறித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இன்னும் முடிவு செய்யவில்லை. ஆயினும் நடராஜன் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு திரும்ப பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. இவர் கடந்த 11ம் தேதி கேகேஆருக்கு எதிரான தனது ஐபிஎல் போட்டியை விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, April 22, 2021, 23:31 [IST]
Other articles published on Apr 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+