இந்த தம்பிய பாருங்க..! அறிமுக போட்டியில் டபுள் சாதனை..! முதல் இந்திய பவுலர்..! சூப்பர்… வாழ்த்துகள்
புளோரிடா: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான அறிமுக ஆட்டத்திலே உலக சாதனை படைத்த இந்திய இளம் வீரர் நவ்தீவ் சைனிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான முதலாவது டி20 போட்டி புளோரிடா மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் இந்தியா முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் இருவரும் ரன் எதுவுமின்றி ஆட்டமிழந்தனர்.

சைனி 3 விக்.
அதிகபட்சமாக பொல்லார்டு 49 ரன்கள் குவித்தார். இந்திய அணியில் அறிமுக வீரரான சைனி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்தியா 17.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் அடித்து தட்டு தடுமாறி வென்றது.

ஆட்ட நாயகன் சைனி
இந்திய அணி சார்பாக ரோகித் சர்மா 26 ரன்கள் அடித்தார். ஆட்ட நாயகனாக அறிமுக வீரர் சைனி தேர்வானார். நேற்றைய போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக நவதீப் சைனி இடம் பிடித்தார்.

சைனி சாதனை
ஆடிய முதல் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய சைனி 4 ஓவர்களில் 17 ரன்களை விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் அறிமுக போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற 6வது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

மெய்டன் ஓவர்
அதற்கு முன்னர் தினேஷ் கார்த்திக், பிரக்யான் ஓஜா, பத்ரிநாத், அக்சர் பட்டேல், சரண் ஆகியோர் இந்த சாதனையை படைத்திருந்தனர். மற்றொரு சாதனையையும் அவர் படைத்திருக்கிறார். சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் சிக்கல் மிகுந்த 20வது ஓவரை மெய்டனாக வீசிய 2வது வீரர் மற்றும் முதல் இந்திய பவுலர் என்ற சாதனையையும் நிகழ்த்தி இருக்கிறார்.

ஜனக் பிரகாஷ்
இதற்கு முன்னர், சிங்கப்பூரின் ஜனக் பிரகாஷ் என்ற வீரர் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். ஆசிய அளவிலான டி 20 உலக கோப்பையில் கத்தார் அணிக்கு எதிரான இந்த சாதனையை படைத்தார். உலக சாதனையை படைத்த இளம் வீரர் நவ்தீவ் சைனிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications