Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அதை செஞ்சாதான் அணியில் இடம்” ரோகித்திற்கு பிசிசிஐ-யிடம் இருந்து பறந்த கடிதம்..கேப்டனுக்கே இப்படியா

ஜோஹனஸ்பர்க்: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பிசிசிஐ-யிடம் இருந்து புதிய உத்தரவு பறந்துள்ளது.

புதிய கேப்டனான ரோகித் சர்மா கால்களில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு பிரச்சினை காரணமாக தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்து வெளியேறினார்.

முதலில் டெஸ்ட் தொடரில் மட்டும் தான் விளையாடவில்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்தும் விலகினார்.

ரோகித்தின் உடல்நிலை

ரோகித்தின் உடல்நிலை

அவர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் கடின உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். முழு உடற்தகுதி பெற்றால் மட்டுமே அவரால் இந்திய அணிக்கு திரும்ப முடியும் என்ற இக்கட்டான சூழல் உள்ளது. ஆனால் தசைப்பிடிப்புக்காக இவ்வளவு நாட்களாக பயிற்சி பெறுகிறாரா என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

 திடீர் உத்தரவு

திடீர் உத்தரவு

இந்நிலையில் ரோகித்திற்கு எடையை குறைத்தே ஆக வேண்டும் என சுற்றறிக்கை சென்றுள்ளது. அதிகப்படியான எடை இருப்பதால் அவரின் தொடை பகுதியிலும், மூட்டு பகுதியிலும் அதிக அழுத்தங்கள் கொடுக்கின்றன. எனவே உடல் எடையை 5 - 6 கிலோ வரை குறைத்தால் மட்டுமே தசைப்பிடிப்பு பிரச்சினை குறையும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீண்ட நாள் பிரச்சினை

நீண்ட நாள் பிரச்சினை

ரோகித் சர்மாவுக்கு இந்த பிரச்சினை வருவது இது முதல்முறையல்ல. இதே பிரச்சினை காரணமாக 2021ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். அதன் பின்னர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் ரோகித்தால் பங்கேற்க முடியாத சூழல் உருவானது. எனவே இதற்கு தீர்வு கண்டே ஆக வேண்டிய சூழலில் உள்ளார்.

Recommended Video

BCCI postpones Ranji, CK Nayudu Trophy, Women's T20 league | OneIndia Tamil
கடும் பயிற்சி

கடும் பயிற்சி

இதற்காக உடற்பயிற்சி நிபுணர்களுடன் கலந்தாலோசித்து கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் வெளியான அவரின் புகைப்படங்களில் உடல் குறைந்த ரோகித் சர்மாவை ரசிகர்களால் பார்க்க முடிந்தது. எனவே அடுத்து வரும் இந்தியா - இலங்கை தொடருக்குள் தயராகிவிடுவார் எனத் தெரிகிறது.

Story first published: Tuesday, January 4, 2022, 17:09 [IST]
Other articles published on Jan 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+