For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி, ரோஹித் என்ன.. எந்த கேப்டனும் செய்யாத சாதனை! கிரிக்கெட் உலகை மிரட்டிய நேபாள அணி கேப்டன்!

சிங்கப்பூர் : நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டன் அடித்த சதம் கிரிக்கெட் உலகில் புதிய சாதனை படைத்துள்ளது.

நேபாளம், சிங்கப்பூர், ஜிம்பாப்வே அணிகள் இடையே ஆன முத்தரப்பு டி20 தொடரில் தான் இந்த சாதனையை செய்துள்ளார் நேபாள அணி கேப்டன் பராஸ் கட்கா.

அவர் செய்துள்ள சாதனை, இதுவரை கிரிக்கெட் உலகில் எந்த டி20 அணி கேப்டனும் செய்யாத சாதனை ஆகும்.

போட்டியில் வெற்றி

போட்டியில் வெற்றி

சிங்கப்பூர் அணிக்கு எதிரான டி20 போட்டியில் மோதியது நேபாளம். சிங்கப்பூர் 20 ஓவர்களில் 151 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய நேபாளம் இந்த இலக்கை எட்டி வெற்றி பெற்றது. கேப்டன் பராஸ் கட்கா சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

பராஸ் கட்கா சதம்

பராஸ் கட்கா சதம்

பராஸ் கட்கா 52 பந்துகளில் 106 ரன்கள் குவித்து இருந்தார். அவரது இன்னிங்க்ஸில் 9 சிக்ஸ், 7 ஃபோர் அடங்கும். சேஸிங்கில் பராஸ் அடித்த சதம் தான் சாதனையாக மாறி உள்ளது.

சேஸிங் சதம்

சேஸிங் சதம்

இதுவரை எந்த சர்வதேச டி20 போட்டியிலும், சேஸிங்கில் ஒரு அணியின் கேப்டன் சதம் அடித்ததில்லை. அந்த சாதனையை செய்த முதல் கேப்டன் பராஸ் கட்கா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறாவது கேப்டன் இவர் தான்

ஆறாவது கேப்டன் இவர் தான்

டி20 போட்டிகளில் சதம் அடித்த ஆறாவது கேப்டன் பராஸ் கட்கா. மற்ற ஐந்து கேப்டன்களும் முதலில் பேட்டிங் செய்த போது சதம் அடித்துள்ளனர். அதனால், சேஸிங்கில் சதம் அடித்த முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார் பராஸ்.

சதம் அடித்த மற்றவர்கள்

சதம் அடித்த மற்றவர்கள்

டி20 போட்டிகளில் சதம் அடித்த மற்ற கேப்டன்கள் - ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச், ஷேன் வாட்சன், தென்னாப்பிரிக்கா அணியின் பாப் டு ப்ளேசிஸ், இலங்கையின் தில்ஷன் மற்றும் இந்தியாவின் ரோஹித் சர்மா.

கோலி இல்லை

கோலி இல்லை

விராட் கோலி இதுவரை ஒரு டி20 சதம் கூட அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோலி ஓய்வில் இருக்கும் போது அணியை வழி நடத்தும் ரோஹித் சர்மா, கேப்டனாக ஒரு சதம் அடித்து விட்டார்.

Story first published: Sunday, September 29, 2019, 19:02 [IST]
Other articles published on Sep 29, 2019
English summary
Nepal Captain Paras Khadka achieved a rare century feat, that not even Rohit Sharma or Virat Kohli achieved in T20.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X