Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹசல்வுட் விலகியதற்கு புஜாராதான் காரணமா.... இணையத்தில் பரவும் கேலி கருத்து - என்ன சொல்கிறது நிர்வாகம்

மும்பை: சென்னை அணியின் முக்கிய பவுலர் ஹசல்வுட் தொடரில் இருந்து விலகியதற்கு புஜாரா தான் காரணம் என இணையத்தில் கருத்துகள் பரவி வருகிறது.

ஐபிஎல் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ளது. இதில், ஏப்ரல் 10ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் லீக் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது.

இந்நிலையில் சென்னை அணி முக்கிய பவுலரான ஹசல்வுட் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதற்கு காரணமாய் தற்போது புஜாராவின் பெயர் அடிபட்டுள்ளது.

சி.எஸ்.கே

சி.எஸ்.கே

ஐபிஎல் இதுவரை 3 முறை கோப்பையை வென்றுள்ள சி.எஸ்.கே கடந்த ஆண்டு ப்ளே ஆப்-க்கு கூட செல்லாமல் மோசமாக வெளியேறியது. இதனால் இந்த ஆண்டும் மிகப்பெரும் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்த்த நிலையில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் ஒரு வார காலமே இருக்கும் நிலையில் சென்னை அணியின் முக்கிய பவுலர் ஹாசல் வுட் தொடரில் இருந்து விலகினார்.

ஹசல்வு விளக்கம்

ஹசல்வு விளக்கம்

இதுகுறித்து பேசிய ஹாசல்வுட், நான் கிட்டத்தட்ட 10 மாதங்களாக வெவ்வேறு நேரங்களில் பயோ பபுள் மற்றும் தனிமைப்படுத்தலில் இருந்து வருகிறேன். எனவே கிரிக்கெட்டில் இருந்து சற்று ஓய்வெடுத்துக்கொண்டு அடுத்த 2 மாதம் ஆஸ்திரேலியாவில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன். அடுத்து வரும் முக்கிய தொடர்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயார் ஆக போகிறேன் என தெரிவித்துள்ளர்.

புஜாரா

புஜாரா

இந்நிலையில் புஜாராதான் ஹசல்வுட் வெளியேறியதற்கு காரணம் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். இதற்கு என்ன காரணம் என பார்த்தால் ஆஸ்திரேலிய தொடரை நியாபகப்படுத்தி பார்க்க வேண்டும். இந்தியா - ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது புஜாரா ஒவ்வொரு போட்டியின் போதும் நீண்ட நேரம் களத்தில் இருந்தார். ஆனால் மொத்த தொடரில் அவர் அடித்த ரன்கள் 271 மட்டுமே.

கடுப்பான பவுலர்கள்

கடுப்பான பவுலர்கள்

ரன் ஏதும் அடிக்காமல், அவுட்டும் ஆகாமால், புஜாரா நீண்ட நேரம் பேட்டிங் செய்ததால் ஆஸ்திரேலிய பவுலர்கள் கடுப்பாகினர். அதில் அவருக்கு பந்துவீசியவர்களில் ஹசல்வுட்டும் ஒருவர். எனவே சென்னை அணியின் வலைப்பயிற்சியில் புஜாராவுக்கு நீண்ட நேரம் மறுபடியும் பந்துவீசமுடியாது என்பதால் வெறுத்து போய் ஹசல்வுட் தொடரை விட்டு ஓடியதாக கிண்டலடித்து வருகின்றனர்.

ஹசல்வுட்டுக்கு மாற்று வீரர்

ஹசல்வுட்டுக்கு மாற்று வீரர்

இதுகுறித்து பேசியுள்ள சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், ஹசல்வுட் தொடரில் இருந்து வெளியேறியது அதிரச்சி செய்தியாக இருந்தது. அவருக்கான மாற்று வீரர் குறித்து நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. விரைவில் அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, April 1, 2021, 16:01 [IST]
Other articles published on Apr 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+