Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நமக்கு சோறு தான் முக்கியம்.. விராட் கோலியை பங்கமாக கலாய்த்த ரசிகர்கள்.. நல்ல வேல ரோகித் தப்பிச்சாரு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதி ஆட்டத்தில் விராட் கோலி செய்த காரியத்திற்கு ரசிகர்கள் அவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். 469 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அடித்தது.

இதனை அடுத்து இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் விளையாடினார்கள். இதில் டாப் வரிசை வீரர்கள் யாரும் 20 ரன்களை கூட தாண்டவில்லை. குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா மற்றும் கோலி தலா 14 ரன்களில் வெளியேறினர்.

இந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்த விராட் கோலி நேராக பெவிலியன் திரும்பி தனக்கான சாப்பாடை தட்டில் வைத்து சாப்பிட்டு கொண்டு இருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் சிலர் விக்கெட் விழுந்தவுடன் நேராக விராட் கோலி சாப்பாட்டை தேடி சென்று விட்டதாக கிண்டல் செய்து வருகின்றனர். ஒரு சிலர் எப்போதும் விராட் கோலி விட ரோகித் சர்மா தான் உருவ கேலிக்கு ஆளாகும் நபராக விளங்குகிறார்.

Netizens trolls Virat kohli for taking lunch after getting out for 14 runs

இதுவே ரோகித் சர்மா ஆட்டமிழந்து நேராக சாப்பிட சென்றிருந்தால் கோலி ரசிகர்கள் இந்நேரம் ரோகித் சர்மாவை பங்கமாக கலாய்த்து இருப்பார்கள்.பல மீம்ஸ்கள் இணையதளத்தில் வந்திருக்கும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதேபோன்று டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது ரோகித் சர்மா வாழைப்பழம் சாப்பிட்டதை குறிப்பிட்ட விராட் கோலி ரசிகர்கள் களத்தில் ஒரு நாள் முழுவதும் நின்று விட்டு விராட் கோலி தனக்கான மதிய உணவை சாப்பிடுகிறார். இதில் என்ன தவறு இருக்கிறது என்றும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இன்னும் சிலர் ஐபிஎல் போட்டியில் ஆட்டமிழந்து கோலியும், கில்லும் அவ்வளவு வருத்தப்பட்டதாகவும், ஆனால் இந்திய அணிக்காக விளையாடும்போது தங்களது விக்கெட்டை பறி கொடுத்த பிறகும் அது பற்றி எந்த கவலையும் இல்லாமல் தங்களுக்கான உணவை மகிழ்ச்சியுடன் சாப்பிட்டு வருவதாகவும் விமர்சித்து வருகிறார்கள்.மேலும் சிலர் 2003 உலக கோப்பை தொடரில் இந்திய அணி இறுதி ஆட்டத்தில் தோற்ற பிறகு சச்சின் மூன்று நாட்கள் வரை எதுவும் சாப்பிடவில்லை என்றும். ஆனால் விராட் கோலி விரைவாக ஆட்டமிழந்துவிட்டு சாப்பிடுவதாகவும் விமர்சித்துள்ளனர்.

மேலும் சிலர் விராட் கோலி ஒரு வித்தைக்காரர். ஏனென்றால் எப்போதெல்லாம் நாம் அவரை எதிர்பார்த்து காத்திருப்போமோ அப்போதெல்லாம் அவர் மாயமாக மறைந்து விடுவார் என்று கோலி 14 ரன்களில் ஆட்டம் இழந்ததை குறிப்பிட்டு ரசிகர்கள் கிண்டல் அடித்துள்ளனர்.

Story first published: Friday, June 9, 2023, 12:20 [IST]
Other articles published on Jun 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+