Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆளில்லா விமானம்.. 4கே தொழில்நுட்பம்.. அசத்துகிறது உலக கோப்பை லைவ் ஒளிபரப்பு!

ஆக்லாந்து: அரையிறுதி கிரிக்கெட் போட்டிகள் ட்ரோன் கேமரா மூலம், உயரமான இடத்தில் இருந்து படம் பிடிக்கப்படுவதால் புதிய அனுபவத்தை உணர்கிறார்கள் ரசிகர்கள்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளன. முதலாவது அரையிறுதி போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் மோதின. அந்த போட்டியை ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம்பிடித்து ஒளிபரப்பியது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

New broadcast features all set to make ICC Cricket World Cup cricket’s ‘greatest’ extravaganza

மேலேயிருந்து எடுக்கப்படும் வீடியோக்களில் மைதானத்தின் முழு பரப்பையும் அருமையாக பார்க்க முடியும். டாப் கோணங்களில் வந்த வீடியோக்களை பார்க்கும்போது, புது அனுபவமாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

மேலும், அரையிறுதி போட்டிக்கு பிறகு 4கே தொழில்நுட்பத்தையும் நேரடி ஒளிபரப்பு சேனல் கொண்டுவந்துள்ளது. இதற்காக நவீன கேமராக்கள் மூலம் படம் பிடிக்கப்பட்டு அது நேரடியாக ஒளிபரப்பப்பட்டுவருகிறது.

Story first published: Tuesday, March 24, 2015, 12:52 [IST]
Other articles published on Mar 24, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+