Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாவ்.. வாரே வாவ்.. ஓ இதுதான் புது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியா!

Recommended Video

புது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

பெங்களூர்: ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது. அனைத்து அணிகளும் எந்த வீரர்களை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து தீயாக வேலை செய்து வருகிறது.

சென்னை அணி எந்த வீரர்களை எடுக்க வேண்டும் ஏற்கனவே முடிவு செய்து வைத்து இருக்கிறது. அஸ்வினை ஆர்டிஎம் மூலம் எடுக்க முடியாமல் போனதால் புதிய வீரர்களை எடுத்துள்ளது.

முக்கியமாக அனுபவம் மிகுந்த வீரர்கள் சிலரை அணியில் எடுத்து இருக்கிறது. சென்னை அணியின் தேர்வு முறையே மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.

3 பேர்

சென்னை அணியில் ஏற்கனவே டோணி, ஜடேஜா, ரெய்னா ஆகியோர் எடுக்கப்பட்டுவிட்டார்கள். மீதம் இருக்கும் 2 ஆர்டிம் வாய்ப்பை பயன்படுத்தி இரண்டு வீரர்கள் எடுக்க வேண்டும் என்று இருந்தது. ஆனால் இதை அஸ்வின் மீது பயன்படுத்த முடியாது என்பதால் அவர் எடுக்கப்படவில்லை.

ஆர்டிஎம்

முதல் ஆர்டிஎம் மூலம் ஐபிஎல் ஏலத்தில் டியூ பிளசிஸ் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 1.60 கோடிக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். இவரை ஆர்டிஎம் மூலம் சென்னை எடுத்துள்ளது.

அடுத்த ஆர்டிஎம்

சென்னையால் ஐபிஎல் ஏலத்தில் டிவெய்ன் பிராவோ ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 6.40 கோடிக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். இவரை ஆர்டிஎம் மூலம் சென்னை எடுத்துள்ளது. இதனால் சென்னை அணிக்கு இருந்த ஆர்டிஎம் வாய்ப்புகள் முடிந்துள்ளது.

ஸ்பின் புலி

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் ஏலத்தில் ஹர்பஜன் சிங்கை ஏலம் எடுத்து இருக்கிறது. 2 கோடிக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். இவரது குறைந்தபட்ச தொகை 2 கோடி ஆகும். அஸ்வினுக்கு பதில் இவர் ஸ்பின் பவுலாராக இருப்பார்.

கேதார் ஜாதவ்

சென்னையால் ஐபிஎல் ஏலத்தில் கேதார் ஜாதவ் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 7.8 கோடிக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். இதற்கு முன்பு இவர் கொச்சி, டெல்லி, பெங்களூர் ஆகிய அணிக்காக விளையாடி இருக்கிறார். இவர் சிறந்த ஆல்ரவுண்டர் ஆவார்.

வாட்சன்

மீண்டும் மஞ்சள் ஆடை அணிகிறார் ஷேன் வாட்சன். ஆம் ஆஸ்திரேலியாவிற்கு பிறகு மீண்டும் அவர் தற்போது சென்னைக்காக விளையாட இருக்கிறார். இவர் நான்கு கோடிக்கு வாங்கப்பட்டார். இவரது குறைந்தபட்ச தொகை 1 கோடி ஆகும்.

அசத்தல் அம்பதி ராயுடு

அம்பதி ராயுடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 2.2 கோடிக்கு அம்பதி ராயுடு எடுக்கப்பட்டார். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஐபிஎல் போட்டியில் இவர் கலக்கினார். ஐபிஎல் போட்டிக்கு என்றே செய்யப்பட வீரர் இவர். இவரின் வருகை சென்னை அணிக்கு புதிய பலம் ஆகும்.

கரன்

கரன் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 5 கோடிக்கு கார்ன் சர்மா எடுக்கப்பட்டார். இவருடைய குறைந்தபட்ச தொகை 2 கோடி ஆகும். இந்தியாவை சேர்ந்த வளரும் பவுலர்களில் இவரும் ஒருவர்.

பவுலர்

இம்ரான் தாஹிர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.1 கோடிக்கு இம்ரான் எடுக்கப்பட்டு இருக்கிறார். இவர் சிறந்த பவுலர் என்றாலும் தற்போதே இவருக்கு 38 வயதிற்கும் அதிகம் ஆகிவிட்டது.

Story first published: Saturday, January 27, 2018, 16:05 [IST]
Other articles published on Jan 27, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+