மும்பை: பி.சி.சி.ஐ. தலைவரான கங்குலி, கடந்த சில நாட்களாகவே விராட் கோலி கேப்டன்ஷிப் தொடர்பான சர்ச்சையில் சிக்கினார்.
இந்த நிலையில், கங்குலி இந்திய அணியை எப்படி அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்வது என்பது தொடர்பான திட்டத்தை வெளியிட்டார்.
இதில் சச்சின் தொடர்பாக கங்குலி வெளியிட்ட தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு காலத்தில் சச்சின், டிராவிட், கங்குலி, லட்சுமணன் என இந்த 4 பேரையும் நம்பியே இந்திய கிரிக்கெட் அணியே இருந்தது. தற்போது இதில் ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு பயிற்சியாளராக சிறப்பாக பணியாற்றி வருகிறார். ராகுல் டிராவிட்டின் பங்கு பெருமளவு இந்திய அணிக்கு உள்ளது.

வி.வி.எஸ். லட்சுமணன், தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அங்கு பயிற்சி பெறும் வீரர்களை கவனித்து கொள்ளும் வாய்ப்பு லட்சுமணனுக்கு கிடைத்துள்ளது. ஏற்கனவே கும்ப்ளே பயிற்சியாளராக இருந்தார். ஆனால் சச்சின் தான் இதுவரை எந்த பெரிய பொறுப்பிலும் இல்லை.
இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த கங்குலி, சச்சினுக்கு இந்திய அணியில் பெரியபொறுப்பு காத்து கொண்டு இருக்கிறது சச்சினின் பங்கை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து யோசித்து முடிவு எடுத்துள்ளேன். விரைவில் சச்சினின் பங்கையும் நீங்கள் பார்ப்பீர்கள் என்று பதில் அளித்துள்ளார். கங்குலியின் இந்த அறிவிப்பு சச்சின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.