செம செக்.. தடுமாறும் வில்லியம்சன்.. அடுத்தடுத்து அவுட் அப்பீல் கேட்கும் கோலி - செம மோதல்
சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், வில்லியம்சனுக்கு செம வியூகம் அமைத்திருக்கிறது இந்திய அணி.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, அடிக்கடி மழையால் பாதிக்கப்பட்டு வருகிறது.
மழை காரணமாக ஜூன்.18ம் தேதி தொடங்க வேண்டிய போட்டி, ஜூன் 19ம் தேதி தான் துவங்கியது. அதுபோல், நேற்றைய (ஜூன்.21) நான்காம் நாள் ஆட்டமும் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டு, பிறகு இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்கியிருக்கிறது.

சுமார் பவுலிங்
இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 22 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிறகு, தங்கள் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் விளாசிய டெவோன் கான்வே 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டாம் லாதம் 30 ரன்களில் வெளியேறினார். இந்தியா சார்பில், அஷ்வின், இஷாந்த் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

களமிறங்கிய நியூஸ்.,
இந்நிலையில், இன்று காலை முதல் சவுத்தாம்ப்டனில் சுமாரான வானிலை நிலவி வந்த நிலையில், போட்டி தொடங்கும் நேரத்தில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. எனினும், அதன் பிறகு மழை நிற்கவே, ஆட்டம் மீண்டும் துவங்கியுள்ளது. பணியாளர்களும் துரிதமாக களமிறங்கிய மைதானத்தை சுத்தப்படுத்தியதால் போட்டி உடனடியாக துவங்கப்பட்டது.

வில்லியம்சன் டார்கெட்
இந்த சூழலில், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு இந்திய பவுலர்கள் முதல் செக் வைத்திருப்பதாக தெரிகிறது. அவருக்கு "லெக் ஸ்டெம்ப் அட்டாக்" வியூகம் வகுக்கப்பட்டிருப்பது போல் இருக்கிறது. ஏனெனில், போட்டி தொடங்கிய இந்த 20 நிமிடத்தில், வில்லியம்சனுக்கு வீசப்பட்ட பெரும்பாலான பந்துகள் அவரது லெக் ஸ்டெம்ப்பை நோக்கியே வீசப்பட்டன. ஆஃப் சைடில் அவரது பேட்டிங் கில்லி என்பதால், லெக் சைடில் வீசி எல்.பி. அல்லது கீப்பர் கேட்ச் எடுக்க வியூகம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. வில்லியம்சனுக்கும் சரி, டெய்லருக்கும் சரி இந்திய வீரர்கள் அடுத்தடுத்து அவுட் அப்பீல் கேட்க ஆட்டம் சூடுபிடித்துள்ளது.

20 நிமிடத்தில்
அதுமட்டுமின்றி, அவருக்கு அதிக பவுன்ஸ்களும் வீசப்படுகிறது. மூன்றாம் நாள் ஆட்டத்தில், இந்திய பவுலர்கள் ஒரேயொரு பவுன்ஸ் பந்து தான் வீசியிருந்தனர். இந்த 20 நிமிடத்தில் அவருக்கு மட்டும் 2 பவுன்ஸ் பந்துகள் வீசப்பட்டுள்ளது. ஸோ, இந்திய பவுலர்கள் முழு ஸ்டிரடாஜியோடு விளையாடுவது தெளிவாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications