Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2024ஆம் ஆண்டு புத்தாண்டில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்? நெருக்கடிகளை சமாளிப்பாரா ரோஹித், கோலி

மும்பை : 2024 ஆம் ஆண்டு புத்தாண்டில் இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்கள் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம். கடந்த ஆண்டு ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

அதை போல் இந்த ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடர் தான் நடப்பாண்டில் இந்தியாவுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் இந்தியா வெல்லவில்லை.

New Year 2024 -Challenges ahead of indian team in upcoming 12 months

இதன் காரணமாக இந்த டி20 உலக கோப்பையாவது இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த தொடருக்கான அணியை இந்தியா தயார் செய்ய வேண்டும். ஆனால் இந்திய அணி டி20 உலக கோப்பைக்கு முன் வெறும் மூன்று டி20 போட்டிகள் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. மற்றபடி ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் அதில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களை தேர்வு செய்து ஒரு அணியாக விளையாட வைக்க வேண்டும்.

இதில் தான் பிரச்சனையே இருக்கிறது. டி20 உலககோப்பைக்கு முன் பல டி20 போட்டிகளில் இந்திய வீரர்கள் ஒரு அணியாக பங்கேற்று இருக்க வேண்டும். இது இந்தியாவுக்கு பெரிய மைனஸாக பார்க்கப்படுகிறது. டி20 உலக கோப்பையில் கேப்டன் யார் எந்த சீனியர் வீரர்கள் இடம் பிடிப்பார்கள்? எந்த ஜூனியர்கள் இடம் பிடிப்பார்கள் என்பதை டிராவிட்- ரோகித் கூட்டணி முடிவு செய்ய வேண்டும்.

இதைத் தவிர நடப்பாண்டில் இந்திய அணி 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் அனைத்திலும் இந்தியா வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு மூன்றாவது முறையாக தகுதி பெற முடியும். வரும் மூன்றாம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் பிறகு சொந்த மண்ணில் ஜனவரி மாதம் இறுதியில் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள், வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட், நியூசிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் ஆகிய தொடரில் இந்தியா முழுமையாக வெற்றி பெற வேண்டும்.

அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான அணியையும் நாம் தயார் படுத்த வேண்டும். கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இருப்பதால் ஹாட்ரிக் சாதனையை இந்தியா படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் தற்போது இளம் வீரர்கள் யாரும் தங்களது திறமையை வெளிப்படுத்தாமல் இருப்பது இந்தியாவுக்கு பெரும் சரிவை தருகிறது. இதனால் நடப்பாண்டில் நல்ல ஒரு டெஸ்ட் அணியை கட்டமைக்கும் சூழலில் டிராவிட் ரோகித் ஜோடி இருக்கிறது. நடப்பாண்டில் இந்தியா இலங்கைக்கு எதிராக மூன்றே மூன்று ஒரு நாள் போட்டிகளில் மட்டும் தான் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, January 1, 2024, 10:42 [IST]
Other articles published on Jan 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+