Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின், தோனி, யுவராஜ், அஸ்வின்.. களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்.. பும்ரா பகிர்ந்த போட்டோ

மும்பை: 2026-ம் ஆண்டு பிறப்பை உலகம் முழுவதும் மக்கள் உற்சாகமாகப் புத்தாண்டைக் கொண்டாடி வரும் நிலையில், நமது இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களும் சும்மா இருப்பார்களா? சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்கள், வீடியோக்கள் மற்றும் வாழ்த்துகளைப் பகிர்ந்து இணையத்தையே அதிர வைத்துள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர் முதல் 'தலைவன்' தோனி வரை கிரிக்கெட் பிரபலங்கள் எப்படி புத்தாண்டைக் கொண்டாடினார்கள்? அவர்கள் பகிர்ந்த சுவாரஸ்யமான பதிவுகள் என்ன? என்று பார்க்கலாம்.

New Year 2026 Wish Sachin Tendulkar to MS Dhoni How Cricket Stars Welcomed New Year 2026

சச்சினின் குறும்புப் பதிவு

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் எப்போதும் எதாவது வித்தியாசமாகச் செய்வார். இம்முறையும் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவைப் போட்டு, "ஹலோ? இது 2026 தானா?" (Hello? Is it 2026?) என்று கேட்பது போல ஒரு பதிவை போட்டு ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

தோனியின் 'விளக்கு' கொண்டாட்டம்

நம்ம 'தல' தோனி என்ன செய்தாலும் அது வைரல் தான். புத்தாண்டைக் கொண்டாட தோனி ஒரு அழகான ஸ்கை லான்டர்னை (Sky Lantern) வானில் பறக்கவிடும் வீடியோவை அவருடைய மனைவி சாக்ஷி சிங் பகிர்ந்துள்ளார். ஆரவாரம் இல்லாமல், மிக அமைதியாக தோனி புத்தாண்டை வரவேற்ற விதம் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

தூங்கிப்போன குட்டி பும்ரா!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தனது மனைவி சஞ்சனா கணேசனுடன் இருக்கும் ஒரு அழகான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் போட்டிருந்த கேப்ஷன் தான் ஹைலைட். "அம்மா, அப்பா மற்றும் அங்கத் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துகள். அங்கத் இந்த போட்டோல இல்ல, ஏன்னா அவன் சமத்து பையனா மணி 9 மணிக்கே தூங்கிட்டான்!" என்று ஜாலியாக பதிவிட்டுள்ளார்.

கம்பீரின் கறார் வாழ்த்து

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தனது பாணியில் மிகச் சுருக்கமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். "அனைவருக்கும் உடல்நலம், மகிழ்ச்சி மற்றும் வளம் பெருகட்டும்" என்று எக்ஸ் (Twitter) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

யுவி - ரெய்னா நாஸ்டால்ஜியா

முன்னாள் அதிரடி மன்னன் யுவராஜ் சிங், கடந்த ஆண்டின் சிறந்த தருணங்களை ஒரு வீடியோ தொகுப்பாக வெளியிட்டு, "புது வருஷம், புது இலக்குகள்.. அதே வேகம்" என்று உற்சாகப்படுத்தியுள்ளார். சுரேஷ் ரெய்னாவும் தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி பொங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிட்னி வீதிகளில் விராட் கோலி?

ஒரு பக்கம் விராட் கோலி அனுஷ்காவுடன் இருக்கும் போட்டோ வைரலானாலும், இன்னொரு பக்கம் அவர் ஆஸ்திரேலியாவின் சிட்னி வீதிகளில் புத்தாண்டைக் கொண்டாடிய வீடியோக்களும் இணையத்தில் வலம் வருகின்றன. அவருடன் இளம் வீரர் தேவ்தத் படிக்கலும் காணப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஸ்வின் தனது மனைவி ப்ரீத்தியுடன் விடுமுறையைக் கொண்டாடி வருகிறார். "தனியாகக் காணும் கனவு வெறும் கனவு தான்.. இணைந்து காணும் கனவு தான் நிஜம். சூரியனைச் சுற்றும் அடுத்த சுற்றுப்பாதையில் (ஆண்டில்) நுழைகிறோம்" என்று தத்துவார்த்தமாகப் பதிவிட்டுள்ளார் நம்ம அஸ்வின்.
கிரிக்கெட் பிரபலங்களின் இந்த வாழ்த்து மழை ரசிகர்களுக்குப் புத்தாண்டு பரிசாக அமைந்துள்ளது.

Story first published: Thursday, January 1, 2026, 12:23 [IST]
Other articles published on Jan 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+