ஐயோ நீங்களா?? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கு மீண்டும் ஆப்பு.. இந்தியாவுக்கு எமனாக வந்த நியூசிலாந்து
அகமதாபாத்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு சென்று ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் கனவை மீண்டும் ஒருமுறை நாசமாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது நியூசிலந்து அணி.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு சிறப்பான பேட்டிங் அமைந்துள்ளது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவின் சதத்தால் புதிய உச்சத்தை நோக்கி சென்று வருகிறது.

தோல்வி பாதை
ஓப்பனிங் வீரர் டிராவிஸ் ஹெட் 32, மார்னஸ் லபுசாக்னே 3, ஸ்மித் 38, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம் 17 என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால் 170 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்துவிட்டது. எனினும் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த உஸ்மான் கவாஜா, கேமரூன் கிரீன் ஜோடி நினைத்து பார்க்க முடியாத ஸ்கோருக்கு கொண்டு சென்றனர்.

கவாஜா அச்சுறுத்தல்
ஒருபுறம் உஸ்மான் கவாஜா 150 ரன்கள், மறுபுறம் கேமரூன் கிரீன் 80 ரன்களுக்கும் மேல் என 160 ரன்களுக்கும் மேலாக பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். இதனால் அந்த அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 338 ரன்களை குவித்துள்ளது. 400 ரன்களை தாண்டிவிட்டால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு குறைந்துவிடும்.

இக்கட்டான சூழல்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் இந்திய அணி இப்போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும். ஒருவேளை தோல்வியடைந்துவிட்டா, இந்தியாவின் ஐசிசி கோப்பை கனவு மீண்டும் ஒருமுறை நியூசிலந்திடம் சென்றுவிடும்.

எப்படி?
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 3வது இடத்தில் இருக்கும் இலங்கை அணி, தற்போது நியூசிலாந்துடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி தோற்று, இலங்கை 2 டெஸ்ட் போட்டிகளையும் வென்றுவிட்டால் அந்த அணி இறுதி சுற்றுக்கு சென்றுவிடும்.

பெரிய ஏமாற்றம்
பலமான நியூசிலாந்து வென்றுவிடும் என எதிர்பார்த்த சூழலில் காலை வாரியுள்ளது.முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை 355 ரன்களை குவித்தது.ஆனால் நியூசிலாந்து அணியோ சொந்த மண்ணில் 162 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறுகிறது. எனவே வழக்கம் போல ஐசிசி தொடரின் இறுதிகட்டத்தில் இந்தியாவை நியூசிலாந்து பழிதீர்க்கிறது என ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications