Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. காயத்தால் விலகினார் நியூசிலாந்தின் டிம் சவுத்தி

மும்பை: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து, நியூசிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி, காயம் காரணமாக விலகியுள்ளார்.

3 டெஸ்ட் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்பதற்காக கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 22ம் தேதி கான்பூரில் தொடங்குகிறது.

New Zealand paceman Tim Southee ruled out of India Test series

இந்நிலையில் பயிற்சியின்போது காயமடைந்தததால், டிம் சவுத்தி இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம், 52 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 177 விக்கெட்டுகளை வீழ்த்திய அனுபவம் கொண்ட சவுத்திக்கு பதிலாக, 4 டெஸ்ட்டுகளில் ஆடியுள்ள மேட் ஹென்ட்ரி களமிறக்கப்பட உள்ளார்.

தற்போது நியூசிலாந்து அணி, பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்றுள்ளது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்தை சந்திக்க தயாராகி வருகிறது.

Story first published: Saturday, September 17, 2016, 14:49 [IST]
Other articles published on Sep 17, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+