Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC Final: நச்சுன்னு 15 வீரர்கள்.. இந்திய வம்சாவளி பவுலர்.. சவாலான நியூசிலாந்து அணி அறிவிப்பு

சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணித் தேர்வில் இந்திய அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

இங்கிலாந்து சென்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, ஜூன் 18ம் தேதி தொடங்கும் முதலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது.

பிறகு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துடன் மோதுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, முதன் முறை நடக்கிறது என்பதால், உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இணையான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 கேன் வில்லியம்சன் உறுதி

கேன் வில்லியம்சன் உறுதி

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான நியூசிலாந்து அணி வீரர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கேன் வில்லியம்சன் (சி), டாம் ப்ளண்டெல், ட்ரெண்ட் போல்ட், டெவன் கான்வே, கொலின் டி கிராண்ட்ஹோம், மேட் ஹென்றி, கைல் ஜேமீசன், டாம் லாதம், ஹென்றி நிக்கோல்ஸ், அஜஸ் படேல், டிம் சவுதி, ராஸ் டெய்லர், நீல் வாக்னர், பிஜே வாட்லிங், வில் யங் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

 15 பேர் கொண்ட பட்டியல்

15 பேர் கொண்ட பட்டியல்

ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான 20 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிலிருந்து இந்த 15 பேர் கொண்ட அணி உறுதி செய்யப்பட்டுள்ளது. காயம் காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்த கேன் வில்லியம்சன் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் காயத்தில் இருந்து குணமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அஜஸ் படேல்

அஜஸ் படேல்

இந்த 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணியில், இந்திய வம்சாவளி வீரர் அஜஸ் படேலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஸ்பின்னரான அஜஸ் படேலுக்கு இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது இறுதிப் போட்டிக்கான அணியிலும் அவர் இடம் பிடித்திருக்கிறார். கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில், நியூசிலாந்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடிய போதும், அவர் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 11.71 கோடி

11.71 கோடி

முன்னதாக, நேற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது. அதில், தொடரின் சாம்பியன் அணி $1.6 மில்லியன் டாலர் பரிசுத்தொகை பெற உள்ளார்கள். இந்திய மதிப்பில் சொல்ல வேண்டுமெனில், மதிப்பு சுமார் ரூ. 11.71 கோடி தொகையாம். அதேபோல், தோல்வி அடைந்து இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு, $800,000 பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் ரூ .5.8 கோடி.

Story first published: Tuesday, June 15, 2021, 19:35 [IST]
Other articles published on Jun 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+