ரெண்டு போட்டியிலும் இன்னிங்ஸ் வெற்றி... அபாரமான நியூசிலாந்து.. சொதப்பிய மேற்கிந்திய தீவுகள்!
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக நியூசிலாந்து வெற்றி கொண்டுள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி டி20 மற்றும் டெஸ்ட் என இரண்டு தொடரையும் கைநழுவியுள்ளது.
இதையடுத்து டெஸ்ட் புள்ளிகள் தரவரிசை பட்டியலில் 2வது இடத்திற்கு நியூசிலாந்து முன்னேறியுள்ளது. மேலும் சொந்த மண்ணில் 15வது டெஸ்ட் வெற்றியையும் பெற்றுள்ளது.

தொடர்களில் தோல்வி
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி, அந்த அணியுடன் டி20 மற்றும் 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் மோதியது. இதில் இரண்டு தொடர்களையும் முழுமையாக கைநழுவவிட்டது. இதையடுத்து தற்போது டெஸ்ட் தரவரிசையில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இன்னிங்ஸ் வெற்றி
இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 134 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி கொண்டது. இதேபோல இரண்டாவது போட்டியிலும் இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டுள்ளது.

சிறப்பான போட்டி
இந்த இரண்டாவது போட்டியில் கேப்டன் கேன் வில்லியம்சன் இல்லாத நிலையிலும் மற்ற வீரர்கள் அபாரமாக போட்டியை கொண்டு சென்றனர். கேன் வில்லியம்சன் தன்னுடைய முதல் குழந்தை பிறப்பையொட்டி விடுமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக நியூசிலாந்து, பாகிஸ்தான் அணியுடனான தொடர்களில் மோதவுள்ளது.

2வது இடத்திற்கு முன்னேற்றம்
இந்நிலையில் இந்த வெற்றி மூலம் டெஸ்ட் போட்டிகளின் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு நியூசிலாந்து முன்னேறியுள்ளது. ஆயினும் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையில் மிகவும் சொற்ப புள்ளிகளே வித்தியாசம் காணப்படுகிறது. இதனிடையே சொந்த மண்ணில் நியூசிலாந்திற்கு இது 15வது வெற்றி.


Click it and Unblock the Notifications