Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்லுல இருந்து விலகல்... நாடு திரும்பிய ஆல்-ரவுண்டர்... நெகிழ வைத்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

டெல்லி : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சிற்கு முதல் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

இதையடுத்து அவர் நேற்றைய தினம் பிரிட்டனுக்கு திரும்பியுள்ளார். அவருக்கு நாளை பிரிட்டனில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் செய்த ஒரு சம்பவம் அவரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இடது ஆள்காட்டி விரலில் காயம்

இடது ஆள்காட்டி விரலில் காயம்

ஐபிஎல்லில் இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் வகையில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கி விளையாடினார். ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக முதல் போட்டியில் களமிறங்கி விளையாடிய போது அவருக்கு இடது ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

இதையடுத்து அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகினார். அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட்டில் அவருக்கு இடது கை ஆட்காட்டி விரலில் பிராக்சர் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பிரிட்டன் திரும்பிய ஸ்டோக்ஸ்

பிரிட்டன் திரும்பிய ஸ்டோக்ஸ்

அறுவை சிகிச்சையை அடுத்து அவர் தொடர்ந்து 12 வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து அவர் நேற்றைய தினம் பிரிட்டன் திரும்பியுள்ளார். அவருக்கு நாளை அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

ஜெர்சி பரிசு

ஜெர்சி பரிசு

அவர் நேற்றைய தினம் பிரிட்டனுக்கு தன்னுடைய பயணத்தை மேற்கொண்டார். முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் அவருக்கு அந்த அணியின் ஜெர்சியை வீரர்களின் கையெழுத்துடன் அளித்தனர். இந்த செயல் பென் ஸ்டோக்சை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

ராஜஸ்தான் வீரர்கள் பரிசு

ராஜஸ்தான் வீரர்கள் பரிசு

இதில் சிறப்பான அம்சம் என்னவென்றால், கடந்த டிசம்பரில் கேன்சரால் உயிரிழந்த பென் ஸ்டோக்சின் தந்தை ஜெரார்ட் ஸ்டோக்ஸ் பெயரில் இந்த ஜெர்சி வழங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் அனைவரும் இணைந்து இந்த ஜெர்சியை அவருக்கு பரிசாக அளித்துள்ளனர்.

Story first published: Sunday, April 18, 2021, 11:26 [IST]
Other articles published on Apr 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+