WATCH:நிதா அம்பானி மந்திரம் போட்டாங்களா.. மும்பை ஐபிஎல்லில் ஜெயிச்சுருச்சு..! இது என்னடா புதுக்கதை
ஹைதராபாத்:அம்பானியின் மனைவி நிதா அம்பானியின் மந்திரத்தால் தான் ஐபிஎல் கோப்பையை மும்பை கைப்பற்றியதாக இணையத்தில் ஒரு வீடியோ வலம் வந்து கொண்டிருக்கிறது.
பெரும் பரபரப்புக்கு இடையே, ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னையை ஒரு ரன்னில் வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றிருக்கிறது மும்பை. பொதுவாக விளையாட்டுகளில் வெற்றி, தோல்வி சகஜமான என்று கூறினாலும்... அதன் மீதான ஈர்ப்பால் ஒவ்வொருவரும் தங்களை மறந்துவிடுகின்றனர்.
தமது அணி தான் வெற்றி பெற வேண்டும் என்று சிலர் அதிர்ஷ்டத்தை நம்புகின்றனர். சிலர் கடவுளை நம்புகின்றனர். இதில் 2வது ரகத்தை சேர்ந்தவர்களில் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லை. சென்னைக்கு எதிரான ஐபிஎல் பைனலிலும் இது தான் நடந்தது.

உச்சக்கட்ட டென்ஷன்
யாருக்கு ஐபிஎல் கோப்பை என்ற பரபரப்பான இறுதி போட்டியின் 20வது ஓவர். மும்பை அணி நிர்ணயித்த வெற்றி இலக்கை நோக்கி சென்னை அணி ஆடிக் கொண்டு இருக்கிறது. அப்போது, அணியிலும், மைதானத்திலும் அனைவரும் உச்சக்கட்ட டென்ஷனில் இருக்கின்றனர்.
வைரல் வீடியோ
ஸ்டேடியத்தில் அமர்ந்து ஒரு பக்கம் இந்த போட்டியை கண்டு டென்ஷனில் பார்த்துக் கொண்டிருந்த நிதா அம்பானி செய்த ஒரு செயல் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. யார் வெற்றி பெறுவார்கள் என்றே தெரியாத நிலை... அனைவரும் ஆளுக்கு ஒரு பக்கம் பரபரப்பாக இருக்க படு டென்ஷனில் இருக்கிறார் நிதா அம்பானி.

மந்திரம் சொல்கிறார்
அமர்ந்திருக்கும் அவர், தாம் வைத்திருக்கும் பிரவுன் நிற கைப்பையை திறக்கிறார். அதில் இருந்து ஏதோ ஒன்றை எடுக்கிறார். (அனேகமாக ஏதேனும் சாமி படமோ அல்லது சிறிய சிலையாக இருக்கலாம்) அதனை தொட்டு, தொட்டு வணங்கி வாயில் ஏதோ மந்திரங்களை சொல்கிறார்.

நெட்டிசன்கள் கேலி
கிட்டத்தட்ட வெறும் 12 விநாடிகளே உள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. எதை பற்றியும் கவலைப்படாமல் பக்தி மார்க்கமாக அவர் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார். அதனை தொடர்ந்து நெட்டிசன்களும் தமது பங்குக்கு புகுந்து விளையாட ஆரம்பித்துவிட்டனர்.

யாருக்கு சக்தி?
மும்பை விளையாடி சாம்பியன் ஆகவில்லை.. நிதா அம்பானியின் மந்திரங்களே மும்பைக்கு வெற்றியை கொடுத்திருக்கிறது. எந்த பாபா அல்லது குருவின் சக்தியை விட நிதா அம்பானிக்கு அதிக சக்தி இருக்கிறது.. இந்தியா உலக கோப்பை தொடருக்கு நீங்களும் உடன் செல்வீர்களா? என கலாய்த்து தள்ளியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications