Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் - கேகேஆர் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்.. ஸ்ரேயாஸ் எப்போது திரும்புவார் - அறிக்கை வெளியானது

சென்னை : ஐபிஎல் தொடரில் இரண்டு முறை சாம்பியன் ஆன கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், காயம் காரணமாக நடப்பு சீசனில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து புதிய கேப்டன் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்த பொறுப்புக்கு மூன்று கிரிக்கெட் வீரர்களின் பெயர் பரிசீலிக்கப்பட்டது.

இதில் கே கே ஆர் அணியின் அனுபவ வீரரான சுனில் நரேன் மற்றும் ஆல் ரவுண்டர் சர்துல் தாக்கூர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் நிதிஷ் ரானா ஆகியோர் மத்தியில் கடும் போட்டி நிலவியது.

சுனில் நரேன் இல்லை

சுனில் நரேன் இல்லை

இதில் சுனில் நரேன் 2012 ஆம் ஆண்டு முதல் கே கே கே ஆர் அணியில் விளையாடுகிறார். சமீபத்தில் இவர் இன்டர்நேஷனல் டி20 தொடரில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார். அதில் விளையாடிய 9 போட்டிகளில் கே கே ஆர் அணி ஒரு வெற்றி மற்றும் எட்டு தோல்வியை தழுவி கடைசி இடத்தை பிடித்தது. இதனால் ஐபிஎல் தொடருக்கு அவர் சரிப்பட்டு வர மாட்டார் என அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

இந்த நிலையில் அதிரடி பேட்ஸ்மேன் நிதிஷ் ரானா 2018 ஆம் ஆண்டு முதல் கே கே ஆர் அணியில் விளையாடி வருகிறார். 29 வயதான அவர் கே கே ஆர் அணிக்காக 74 போட்டிகளில் விளையாடி 1744 ரன்கள் அடித்திருக்கிறார். இது ஸ்ட்ரைக் ரேட் 135 ஆகும். கடந்த முறை கூட கே கே ஆர் அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர்களில் இரண்டாவது இடத்தை நிதிஷ் ரானா பெற்றிருந்தார்.

கேப்டன் அனுபவம்

கேப்டன் அனுபவம்

மேலும் நிதிஷ் ரானாவுக்கு கேப்டன் அனுபவமும் உள்ளது. நடந்து முடிந்த சையது முஸ்தாக் அலி கோப்பையில் நிதிஷ் ரானா டெல்லி அணியை 12 போட்டியில் கேப்டனாக வழிநடத்திருக்கிறார். இதில் டெல்லி அணி எட்டு போட்டிகளில் வெற்றியும் நான்கு போட்டிகளில் தோல்வியும் தழுவி இருக்கிறது. இதனால் நிதிஷ் ராணா கேப்டன் பொறுப்புக்கு சரியான நபராக இருப்பார் என அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

புதிய பயிற்சியாளர் குழு

புதிய பயிற்சியாளர் குழு

இம்முறை கே கே ஆர் அணி புதிய பயிற்சியாளர் தலைமையில் விளையாடுகிறது. கடந்த சீசனில் பயிற்சியாளர் மெக்குலத்திற்கும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மெக்குலம் பதவியை ராஜினாமா செய்து விட்டு இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.இதனால் தற்போது மத்திய பிரதேச அணிக்கு ரஞ்சிக்கோப்பையை பெற்றுத்தந்த பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் கே கே ஆர் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருணும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரேயாஸ் எப்போது வருவார்?

ஸ்ரேயாஸ் எப்போது வருவார்?

இது தொடர்பாக கே கே ஆர் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்ரேயாஸ் ஐயர் விரைவில் குணமடைந்து ஐபிஎல் 2023 ஆம் தொடரின் பிற்பாதியில் பங்கேற்பார் என நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். நிதிஷ் ரானா கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த வீரராக எங்கள் அணியில் இருப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறோம். அவர் எங்களுக்காக சிறந்த பணியை செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நிதிஷ்ரானா பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் மற்றும் இதர பயிற்சியாளர்களுக்கு கே கே ஆர் அணி நிர்வாகம் முழு ஒத்துழைப்பை கொடுக்கும். இம்முறை கே கே ஆர் அணி சிறப்பாக விளையாடும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது எனவும் அந்த அணி நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Story first published: Monday, March 27, 2023, 19:57 [IST]
Other articles published on Mar 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+