இந்திய அணியில் அதிகரிக்கும் கொரோனா.. டிரெஸிங் ரூம்மில் என்ன பிரச்சினை.. பயோ பபுள் இல்லாததால் சிக்கல்
லெஸ்டர்: இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் கொரோனா பிரச்சினை தலை விரித்து ஆடும் சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இந்த நிலையில், வீரர்களின் மனதை சோர்வடைய செய்யும் பயோ பபுள் விதிகளை பிசிசிஐ நீக்கியுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகும் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முதலில் விராட் கோலி, அஸ்வின் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாசிட்டிவ் என்ற ரிசல்ட் வந்துள்ளது.

பயிற்சி ஆட்டத்தில் இல்லை
நேற்று பயிற்சி ஆட்டத்தில் கூட ரோகித் சர்மா மைதானத்திற்கு வரவில்லை. அவருடைய பேட்டிங் இடத்தில் கேஎஸ் பரத் விளையாடினார். முதலில் இது டிராவிட் வகுத்த யுத்தி என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரோகித் சர்மாவிக்கு ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

பாதுகாப்பில் சிக்கல்
இந்த நிலையில், இங்கிலாந்தில் கொரோனா எண்ணிக்கை தினசரி 10 ஆயிரத்தை தாண்டும் நிலையில், இந்திய வீரர்கள் தினந்தோறும் ஷாப்பிங் செல்வது, உணவு விடுதிக்கு செல்வது, ரசிகர்களுடன் செல்பி எடுப்பதுமாக இருந்து வருகின்றனர். இது வீரர்களின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.

ரோகித் சந்தேகம்
தற்போது ரோகித் சர்மாவுக்கு எவ்வித அறிகுறிகளும் இல்லை என்றும், 3 நாள் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் ரோகித் சர்மா டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வீரர்களின் பாதுகாப்பை பிசிசிஐ உறுதி செய்யுமா பொறுத்து இருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications