Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யார் வேண்டுமானாலும் வெல்லலாம்... சொல்கிறார் வக்கார் யூனிஸ்

கொல்கத்தா: உலகக் கோப்பை டி 20 தொடரில் யார் வேண்டுமானாலும் வெல்லலாம். இவர்கள்தான் வெல்வார்கள் என்று குறிப்பிட்டு யாரையும் சொல்ல முடியாது என்று பாகிஸ்தான் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் கூறியுள்ளார்.

டி 20 போட்டி எப்போதுமே கணிக்க முடியாதது. எனவே இவர்தான் வெல்வார் என்று எந்த அணியையும் கணிக்க முடியாத நிலையே நிலவி வருவதாகவும் யூனிஸ் கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

நன்றாக விளையாடினால் கோப்பை

நன்றாக விளையாடினால் கோப்பை

தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் அணியே வெல்லும். 3 வாரப் போட்டி இது. 3 வாரமும் எந்த அணி சிறப்பாக ஆடுகிறதோ அதுவே வெல்லும்.

எது வேண்டுமானாலும் நடக்கலாம்

எது வேண்டுமானாலும் நடக்கலாம்

இவர்கள்தான் வெல்வார்கள், இவர்களுக்குத்தான் வாய்ப்பு என்று யாரையும் கை காட்ட முடியாது. எது வேண்டுமானாலும் நடக்கலாம், யார் வேண்டுமானாலும் வெல்லலாம்.

கடந்த போட்டிகளைப் பாருங்கள்

கடந்த போட்டிகளைப் பாருங்கள்

கடந்த தொடர்களே இதற்கு உதாரணம். யாரெல்லாம் வெல்வார்கள் என கணிக்கப்பட்டார்களோ அவர்களைத் தவிர மற்றவர்கள்தான் கோப்பையை வென்றுள்ளனர். இந்தப் போட்டி முறை அப்படி.

வங்கதேசத்திடம் கவனம் தேவை

வங்கதேசத்திடம் கவனம் தேவை

பாகிஸ்தான் தனது முதல் போட்டியில் வங்கதேசத்தைச் சந்திக்கிறது. அவர்களிடம் எப்போதுமே கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் சிறப்பாக ஆடி வருகிறார்கள்.

பாகிஸ்தானும் பெஸ்ட்தான்

பாகிஸ்தானும் பெஸ்ட்தான்

பாகிஸ்தான் அணியில் சிறந்தவர்கள் நிறைய உள்ளனர். முகம்மது ஆமிர், முகம்மது இர்பான், வஹாப் ரியாஸ், முகம்மது சமி ஆகியோர் சிறப்பான பார்மில் உள்ளனர் என்றார் வக்கார்.

Story first published: Tuesday, March 15, 2016, 19:24 [IST]
Other articles published on Mar 15, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+