For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனிக்கும், எனக்கும் என்ன நடந்துச்சுன்னு தெரியும்ல..? அதேதான் இப்போ கோலிக்கும், ரோகித்துக்கும்..!

Recommended Video

Watch Video : No fight between kohli and rohit according to me says sehwag

கிங்ஸ்டன்: தோனிக்கும், எனக்கும் என்ன நடந்ததுன்னு எல்லோரும் நினைச்சாங்களோ அதே தான், ரோகித்துக்கும், கோலிக்கும் நடக்கிறது என்று வீரேந்திர சேவாக் கூறியிருக்கிறார்.

உலக கோப்பை தொடர் முடிந்தது. காலரை பந்தாவாக தூக்கிவிட்டு சென்ற இந்தியா வெறுங்கையுடன் ஊர் திரும்பியது. வசவுகள் ஆரம்பித்தன. தோல்விக்ககான காரணம் என்று ஆளுக்கு ஒன்றை பிடித்துக் கொண்டு பேச ஆரம்பித்தனர்.

பயிற்சியாளர் மாற்றம் என்று ஒன்றை வைத்துக் கொண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் கண்ணாமூச்சி ஆடியது. பின்னர் ரவி சாஸ்திரியையே அங்கே கொண்டு வந்து உட்கார வைத்துவிட்டு பல காரணங்களை சொல்லி தேர்வை நியாயப்படுத்தியது.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இப்போது எல்லாம் முடிந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு இந்தியா சென்று விட்டது. கிட்டத்தட்ட அந்த சுற்றுப்பயணமும் முடிகிற தருணத்தில் இருக்கிறது. டெஸ்ட் தொடர் ஆரம்பித்து போய் கொண்டிருக்கிறது. 2வது டெஸ்ட் நடந்து கொண்டிருக்கிறது.

கோலி பிளான்

கோலி பிளான்

அந்த டெஸ்டிலும் ரோகித்துக்கு நஹி சொல்லப்பட்டிருக்கிறது. ஒருநாள், டி 20 கலக்கும் ரோகித், டெஸ்ட் அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வருகிறார். இதற்கு கோலியின் மாஸ்டர் பிளானே (என்ன பிளானோ இதுவரை யாருக்கும் தெரியாது) காரணம் என்று செய்திகள் றெக்கை கட்டி பறந்து கொண்டு வருகின்றன.

சேவாக் கருத்து

சேவாக் கருத்து

அதே நேரத்தில் கோலிக்கும், ரோகித்துக்கும் சண்டை என்று பேச்சுகளும் உலா வருவது நிற்கவில்லை. இப்போதும் அந்த விவகாரம், நாடு மாறியும் மாறவில்லை. இது குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் ஒரு பேட்டி அளித்துள்ளார்.

அவசியம் இல்லை

அவசியம் இல்லை

அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தால் அந்த நான்கு பேரும் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிட வேண்டும். ஒரே நேரத்தில் வெளியில் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதுமாதிரி தான் கோலி ரோகித் விஷயம்.

பிரச்னையில்லை

பிரச்னையில்லை

ஒன்றாக சாப்பிடவில்லை, ஒன்றாக செல்லவில்லை, ஒன்றாக பார்க்க முடிவதில்லை என்பதெல்லாம் அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்று சொல்ல முடியாது. அவர்கள் இருவரும் நல்ல நட்புடன் இருக்கிறார்கள். அவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை.

எனக்கும் நடந்தது

எனக்கும் நடந்தது

மேலும் நான் விளையாடிய போது தோனிக்கும், எனக்கும் சண்டை இருந்தது என்று கூறினார்கள். ஆனால் எனக்கும், தோனிக்கும் நடுவில் எந்தவித சண்டை மற்றும் பிரச்சனையோ எங்களுக்குள் இருந்ததில்லை. யார் இது போன்ற தகவல்களை கொடுக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.

ஒற்றுமை உள்ளது

ஒற்றுமை உள்ளது

ஆனால் இதெல்லாமே தவறான தகவல்கள் தான் நாங்கள் இருக்கும்போது அனைவரும் ஒற்றுமையாகவே இருந்தோம். அதேபோன்று ரோகித் கோலி ஆகியோர் நல்ல ஒற்றுமையோடு இருக்கின்றனர் என்றார்.

Story first published: Saturday, August 31, 2019, 10:18 [IST]
Other articles published on Aug 31, 2019
English summary
No fight between kohli and rohit according to me says sehwag.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+