Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்கள் விருது வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுமா அஸ்வின், ரஹானே அவர்களே?

சென்னை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நாயகன் விருதை சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்ப்பிப்பதாக அஸ்வின் கூறியுள்ளார். ஆட்ட நாயகன் விருதை சமர்ப்பிப்பதாக ரஹானே கூறியுள்ளார். ஆனால் ஒருவரும் நிதி உதவி பற்றி வாய் திறக்கவில்லை.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியையும் இந்தியா வென்றது. இத்தொடரில் அஸ்வின் 31 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி, தொடர் நாயகன் விருதை பெற்றார்.

கடைசி டெஸ்டின் இரு இன்னிங்சிலும் சதம் விளாசிய ரஹானே ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச்சென்றனர்.

அர்ப்பணிப்பாம்

அர்ப்பணிப்பாம்

இவ்விருவருமே, ஆட்டத்திற்கு பிறகு அளித்த பேட்டியில், தங்கள் விருதுகளை சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தனர்.

நிவாரணம் எங்கே..

நிவாரணம் எங்கே..

ஆனால், தொடரை வென்ற இந்திய அணி தரப்பில் இருந்தோ, அல்லது ஆட்டம் மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்றவர்கள் தரப்பில் இருந்தோ, வெள்ள நிவாரணத்துக்கு நிதி உதவி அளிப்பதாக ஒரு வார்த்தையும் வரவில்லை.

கோஹ்லிக்கு கோரிக்கை

கோஹ்லிக்கு கோரிக்கை

டெஸ்ட் தொடரில் கிடைக்கும் பணத்தை வெள்ள நிவாரணத்துக்கு அளிக்குமாறு வலியுறுத்தி, கேப்டன் கோஹ்லி மற்றும், பிசிசிக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக கோரிக்கைவிடுக்கப்பட்டு வந்தது. ஆனால், அதுபற்றி யாருமே இதுவரை வாய் திறக்கவில்லை.

வெற்று வார்த்தை

வெற்று வார்த்தை

விருதை சமர்ப்பிப்பதாக கூறிய வெற்று வார்த்தை, வெள்ளத்தில் பாதித்த மக்களை காப்பாற்றுமா? நிதி உதவி அறிவித்திருந்தால், நாட்டிலுள்ள பிற மக்களும் கிரிக்கெட் வீரர்கள் வழியில், உதவிகளை கொட்ட ஆரம்பித்திருப்பார்களே?

பொறுத்திருக்கலாம்

அதேநேரம், ஆட்டத்திற்கு பிறகு அஸ்வின் வெளியிட்ட டிவிட் ஒன்றில், "நான் யாருடனும் சேர்ந்து நிவாரண பணியாற்றப்போவதில்லை, நான் தனிப்பட்ட முறையில் அதை செய்யப்போகிறேன். எனது விருப்பப்படி அது அமையும்" என்று கூறியுள்ளார். பொறுத்திருந்து பார்க்கலாம், என்ன செய்யப்போகிறார் என்பதை..

Story first published: Monday, December 7, 2015, 17:59 [IST]
Other articles published on Dec 7, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+