Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சோயிப் மாலிக்கிற்கு பேர்வெல் டின்னர்தான்... பேர்வெல் மேட்செல்லாம் இல்லை… வாசிம் அக்ரம் ஆசை

லண்டன்: பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் சோயிப் மாலிக் நடப்பு உலக கோப்பையுடன் ஓய்வு பெற உள்ளதால் அவருக்கு பேர்வெல் டின்னார் கொடுத்து விடைகொடுக்கலாம் என்று வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

உலக கோப்பை தொடருடன் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக ஓராண்டுக்கு முன்பே பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் சோயிப் மாலிக் அறிவித்து இருந்தார். லார்ட்ஸ் மைதானத்தில் பாகிஸ்தான் அணி வங்கதேசக்கு எதிராக தனது கடைசி லீக் போட்டியில் விளையாடி வருகிறது. இன்றைய போட்டியில் சோகிப் மாலிக் அணியில் இடம்பெறவில்லை.

No need for farewell match to shoaib malik, dinner may organized says wasim akram

இந் நிலையில், பாக். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சோயிப் மாலிக் உலக கோப்பை தொடருக்கு முன்னாதாகவே ஓய்வை அறிவித்துவிட்டார். கடைசி சில போட்டிகளில் அவர் சிறப்பாக ஆடவில்லை.

2 போட்டிகளில் டக் அவுட். எந்த ஒரு வீரருக்கும் இந்த நிலைமை வரும். சோயப் மாலிக் பாகிஸ்தானுக்காக விளையாடியதை யாராலும் மறக்க முடியாது. பல போட்டிகளில் அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார். சிறந்த வீரரான அவருக்கு சிறந்த பிரிவு உபச்சாரம் அளித்து பெருமைப்படுத்த வேண்டும் என்றார்.

சோயிப் மாலிக்கிற்கு பேர்வெல் மேட்ச் வாய்ப்பு கொடுக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வாசிம் அக்ரம், இது கிளப் மேட்ச் கிடையாது. வாய்ப்பளித்து விடைகொடுக்க.. வேண்டுமானால் அவருக்கு சிறந்த பேர்வெல் டின்னர் கொடுக்கலாம் என்றார்.

37 வயதான சோயிப் மாலிக் நடப்பு உலகக் கோப்பை தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 8 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 2 போட்டிகளில் டக் அவுட்டாகி உள்ளார். மேலும் இந்தியாவுடனான போட்டிக்கு முன் இரவு டின்னரில் அவர் கலந்து கொண்ட வீடியோ வைரலாகி கடும் விமர்சனத்திற்கு ஆளானது.

Story first published: Friday, July 5, 2019, 21:34 [IST]
Other articles published on Jul 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+