மே. இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட்- தவன் உள்ளே.. ரெய்னா வெளியே
மும்பை: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
வழக்கம் போல ஜாகிர் கானுக்கும், வீரேந்திர ஷேவாக்குக்கும் இடம் தரவில்லை. சுரேஷ் ரெய்னா நீக்கப்பட்டுள்ளார். ஷிகர் தவன் சேர்க்கப்பட்டுள்ளார்.
2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் மோதவுள்ளன. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 6 முதல்
நவம்பர் 6ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெறும். இதுதான் சச்சினின் 199வது டெஸ்ட் போட்டியாகும்.

ஜடேஜாவுக்கு தோளில் காயம்
ரவீந்திர ஜடேஜா அணியில் இல்லை. அவருக்கு தோள்பட்டையில் காயம் என்று கூறப்பட்டுள்ளது. 2 வாரம் அவர் ஓய்வெடுக்க வேண்டுமாம்.

ஷிகருக்கு இடம்
ஷிகர் தவனுக்கு இடம் கிடைத்துள்ளது. கடைசியாக அவர் கடந்த ஏப்ரலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரமாதமாக ஆடியிருந்தார்.

ரெய்னாவுக்கு இடமில்லை
அதேசமயம், சுரேஷ் ரெய்னாவுக்கு இடம் தரப்படவில்லை.

ரோஹித் சர்மா ரிட்டர்ன்ஸ்
சமீபத்திய ஒரு நாள் போட்டிகளில் பிரமாதமாக ஆடியதால் ரோஹித் சர்மாவுக்கு இம் கிடைத்துள்ளது.

4 வேகம்.. 3 சுழல்
அணியில் 4 வேகப் பந்து வீச்சாளர்களு்ம், அஸ்வின் தலைமையில் 3 சுழற்பந்து வீச்சாளர்களும் இடம் பிடித்துள்ளனர்.

அணி
டோணி, ஷிகர் தவன், முரளி விஜய், சட்டேஸ்வர் பூஜாரா, சச்சின் டெண்டுல்கர், விராத் கோஹ்லி, ஆர்.அஸ்வின், புவனேஸ் குமார், பிரக்யான் ஓஜா, அமித் மிஸ்ரா, அஜிங்கியா ரஹானே, உமேஷ் யாதவ், முகம்மது சமி, ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா.


Click it and Unblock the Notifications