எப்போது ரிடையர்மென்ட் – 47 வயது ஹாக் சொல்வதை கேளுங்க!
டெல்லி: நாளை தனது 47வது பிறந்தநாளை கொண்டாட உள்ள ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக்கிடம் எப்போது ரிடையர்மென்ட் என்று கேட்டால் அவருக்கு கோவம் வந்துவிடும்.
ரிடையர்மென்ட் வாங்கும் வயதா எனக்கு ஆகிவிட்டது. அதற்கு சான்சே இல்லை. நான் இன்னும் நிறைய விளையாட வேண்டும் என்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 போட்டித் தொடருக்கு 38 வயதாகும் ஆஷிஷ் நெஹ்ராவை அழைத்துபோது, இவர் இன்னும் ரிடையர்ட் ஆகவில்லையா என்ற கேள்வி பலருக்கும் வந்திருக்கும்.
அவரையெல்லாம் தூக்கிப் போட்டு ஒரு வாயில் சாப்பிடுகிரார் பிராட் ஹாக். நான் வயதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. இன்னும் நிறைய சாதிக்கணும். ஆஸ்திரேலியாவுக்காக மீண்டும் விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார் ஹாக்.

கிரிக்கெட் வரலாற்றில், மிகவும் அதிக வயதில் விளையாடியவர் என்ற பெருமை, இங்கிலாந்தின் வில்பிரட் ரோட்ஸ் பெற்றுள்ளார். 52 வயதைத் தாண்டியும் விளையாடியுள்ளார்.
டி-20 போட்டிகள் வந்தபிறகு, உள்நாட்டில் நடக்கும் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு உள்ளதால், பலர் ஓய்வு பெறுவது குறித்து அறிவிக்கவில்லை. ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக் போட்டியிலும், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியிலும் விளையாடி வருகிறார் ஹாக்.
காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக அவர் விளையாடவில்லை. தற்போது, இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியின்போது வர்ணனையாளராக இருந்துள்ளார்.


Click it and Unblock the Notifications