Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்பாடி சச்சின் இல்லாதது எங்களுக்கு எவ்ளோ ஈஸியா இருக்கு: தென்னாப்பிரிக்க அணி பயிற்சியாளர்

ஜொஹன்னஸ்பர்க்: இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் இல்லாதது தென்னாபிரிக்க அணிக்கு மிகளவும் எளிதாக உள்ளதாக தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் ரஸல் டோமிங்கோ தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்றார். இதனால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் அணியினரும் சற்று கவலையில் தான் உள்ளனர்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரஸல் டோமிங்கோ சச்சின் பற்றி கருத்து தெரிவித்திருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது.

சச்சின் இல்லை

சச்சின் இல்லை

இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் இல்லாததால் அந்த அணிக்கு எதிராக திட்டம் போட தென்னாப்பிரிக்க அணிக்கு மிகவும் எளிதாக உள்ளதாக தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் டோமிங்கோ தெரிவித்துள்ளார்.

மிகப் பெரிய வீரர்

மிகப் பெரிய வீரர்

இந்திய அணிக்கு சச்சின் மிகப் பெரிய வீரர். அணி வீரர்களின் டிரஸ்ஸிங் அறையில் அவர்களை சாந்தப்படுத்தும் திறன் உடையவர். இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தப் போவதாக டோமிங்கோ தெரிவித்துள்ளார்.

2 தோல்வி

2 தோல்வி

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் சாதனை

சச்சின் சாதனை

கடந்த 2010-2011ம் ஆண்டில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின் 2 சதங்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, December 10, 2013, 13:17 [IST]
Other articles published on Dec 10, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+