Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

துண்டு துணுக்கு வீரர் சர்ச்சை... இந்த முறையும் வர்ணனை செய்ய மஞ்ச்ரேகருக்கு வாய்ப்பில்லை

டெல்லி : ஐபிஎல் 2021 சீசனில் கிரிக்கெட் வர்ணனையை மேற்கொள்ளவுள்ளவர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இதில் சுனில் கவாஸ்கர், தீப்தாஸ் குப்தா, லஷ்மன் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட இந்திய வர்ணனையாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஆனால் சஞ்சய் மஞ்ச்ரேகரின் பெயர் இந்த சீசனிலும் இடம்பெறவில்லை.

மஞ்ச்ரேகர் சர்ச்சை பேச்சு

மஞ்ச்ரேகர் சர்ச்சை பேச்சு

கடந்த உலக கோப்பை தொடரின்போது ரவீந்திர ஜடேஜாவை துண்டு துணுக்கு வீரர் என்று கமெண்ட் செய்திருந்தார் முன்னாள் வீரர் சஞ்ச் மஞ்ச்ரேகர். இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மேலும் ஹர்ஷா போக்ளேவுடனும் ஆன்-ஏரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் மஞ்ச்ரேகர்.

பிசிசிஐயிடம் மன்னிப்பு

பிசிசிஐயிடம் மன்னிப்பு

இதையடுத்து அவரை வர்ணனையாளர்கள் பட்டியலில் இருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நீக்கியது பிசிசிஐ. இதையடுத்து தன்னுடைய கமெண்ட்டுக்காக இருமுறை பிசிசிஐயிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதிய மஞ்ச்ரேகர், தன்னை மீண்டும் வர்ணனையாளர்கள் பட்டியலில் இணைக்க கோரிக்கை விடுத்திருந்தார்.

ஐபிஎல் 2020 தொடரில் வாய்ப்பு மறுப்பு

ஐபிஎல் 2020 தொடரில் வாய்ப்பு மறுப்பு

தன்னை வர்ணனையாளர்கள் பட்டியலில் இணைக்கவில்லை என்றாலும் பிசிசிஐக்கு தான் எப்போதும் மரியாதை செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவரது கோரிக்கை ஏற்கப்படாமல் உள்ளது. கடந்த ஐபிஎல் தொடரிலும் அவருடைய பெயர் இடம்பெறவில்லை.

மஞ்ச்ரேகருக்கு வாய்ப்பில்லை

மஞ்ச்ரேகருக்கு வாய்ப்பில்லை

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரிலும் அவரது பெயர் இடம்பெறவில்லை. ஐபிஎல் 2021 தொடருக்கான ஆங்கில வர்ணனையாளர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ள நிலையில் அதில் ஹர்ஷா போக்ளே, சுனில் கவாஸ்கர், லஷ்மன் சிவராமகிருஷ்ணன், தீப்தாஸ் குப்தா போன்ற இந்திய வர்ணனையாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

Story first published: Monday, April 5, 2021, 15:12 [IST]
Other articles published on Apr 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+