For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு கேமராவில் கூட பதிவாகவில்லையா?.. இந்திய வீரர்களை கூப்பிட்டு வைத்து அவமானப்படுத்திய ஆஸி.. பின்னணி

சிட்னி: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா அணியின் ரசிகர்கள் நேற்று இனவெறி தாக்குதல் நடத்தியது குறித்து ஒரு வீடியோவும் வெளியாகாதது பெரிய சர்ச்சையாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை டிரா செய்ய இந்திய அணி தீவிரமாக போராடி வருகிறது. முக்கிய வீரர்கள் அவுட்டான காரணத்தாலும் களத்தில் இருக்கும் வீரர்கள் காயத்தால் அவதிப்படுவதாலும் இந்திய அணி மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.

இந்த ஆஸ்திரேலிய தொடர் பல சர்ச்சைகளுக்கு இடையில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் இந்திய வீரர்கள் மீது இன ரீதியான தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.

தாக்குதல்

தாக்குதல்

இந்திய வீரர்களை குரங்கு என்று கூறி இன ரீதியாகவும், மதத்தை குறிப்பிட்டும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக சிராஜ், பும்ரா, சைனி ஆகியோரை குறி வைத்து இதுபோன்ற இனவெறி தாக்குதல்களை நடத்தி உள்ளனர். நேற்றும் இந்திய வீரர் சிராஜை ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் குரங்கு என்று கூறியுள்ளனர்.

சீண்டினார்கள்

சீண்டினார்கள்

அதோடு சிராஜை தொடர்ந்து வார்த்தைகளால் அச்சுறுத்தி வந்துள்ளனர். சிராஜ் தனது வருத்தத்தை முகத்தில் வெளிப்படையாக காட்டினார். இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் ரஹானேவிடம் சிராஜ் புகார் அளித்தார். இதை தொடர்ந்து சிராஜை சீண்டிய ஆஸ்திரேலிய ரசிகர்கள் 6 பேர் வெளியேற்றப்பட்டனர்.

எப்படி

எப்படி

6 ரசிகர்களும் வெளியேற்றப்பட்ட வீடியோ நேற்று வெளியானது. ஆனால் இந்த 6 பேரும் சிராஜை சீண்டிய வீடியோ வெளியாவில்லை. சிராஜிடம் இவர்கள் இனவெறி ரீதியாக நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகவில்லை. இந்த சம்பவம் பெரிய அளவில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சந்தேகம்

சந்தேகம்

சிட்னி மைதானம் முழுக்க பல நூறு கேமராக்கள் உள்ளது. ஆனால் ஒரு கேமராவில் கூட இந்த சம்பவம் பதிவாகவில்லையா என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக ஒரு வீடியோ கூட வெளியாகாதது எப்படி? ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இது தொடர்பான வீடியோக்களை வெளியிடாதது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.அதுவும் ஐசிசி விசாரணை நடக்கும் நிலையில் வீடியோ வெளியாகாமல் உள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மோசம்

மோசம்

இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய அழைத்து ஏற்கனேவே அந்த அணி நிர்வாகம் பல முறை அவமானப்படுத்திவிட்டது. இந்த நிலையில் தற்போது இனவெறி தாக்குதலுக்கான ஆதாரங்களை கூட வெளியிடாமல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அரசியல் செய்து வருகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இந்த செயல் காரணமாக கடைசி டெஸ்ட் போட்டி நடக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Monday, January 11, 2021, 18:08 [IST]
Other articles published on Jan 11, 2021
English summary
No video released by CA after Siraj gets racial slurs by fans in 3rd test against Australia.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+