Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி, ரோகித் கிடையாது.. இந்த 30 வயது வீரர் தான் ஆபத்தை தருவார்.. ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ்

மும்பை : இந்திய அணி இன்று நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் முடிவடைந்த உடன் சீனியர் வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சென்று பார்டர் கவாஸ்கர் தொடருக்கு பயிற்சி செய்ய தொடங்கி விடுவார்கள்.

சூரியகுமார் தலைமையிலான இளம் வீரர்கள் கொண்ட படை தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும்.

ind vs nz shubman gill rohit sharma cricket

இந்த நிலையில் வரும் நவம்பர் 22 ஆம் தேதி ஆஸ்திரேலியா தொடர் தொடங்குகிறது. இதற்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ், தங்களது அணிக்கு இந்திய வீரர் பும்ரா தான் ஆபத்தை கொடுப்பார் என்று கணித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், நான் இந்திய வீரர் பும்ராவின் மிகப்பெரிய ரசிகன். பும்ரா மிகச் சிறந்த வீரராக விளங்குகிறார்.

அவருக்கு எதிராக மட்டும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு அவரை அமைதியாகிவிட்டால் நிச்சயமாக நாங்கள் வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருக்கிறது. பும்ரா மட்டுமல்லாமல் மேலும் சில வீரர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக விளையாடியது கிடையாது.

நாங்களும் பல வீரர்களை இதற்கு முன்பு பார்த்தது கிடையாது. எனவே போகப்போக தான் அந்த தொடர் எப்படி இருக்கும் என்று தெரியும். நாங்கள் கடைசியாக இந்தியாவுக்கு எதிராக இரண்டு தொடர்கள் விளையாடி சில ஆண்டுகள் ஆகிவிட்டது. அதையெல்லாம் நாங்கள் தாண்டி வந்து விட்டோம். நான் ரோகித் சர்மாவுக்கு எதிராக பல போட்டிகளில் விளையாடியது கிடையாது. எனவே அவர் குறை நிறை என்ன என்று எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது.

ஆனால் ரோகித் தலைமையில் இந்திய அணி தற்போது சிறப்பாக செயல்படுகிறது. ஒருங்கிணைந்து அனைத்தையும் முன்பே திட்டமிட்டு செய்யும் அணியாக திகழ்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக இந்தியாவுக்கு எதிராக நாங்கள் பல வெற்றிகளை கடந்த காலங்களில் ருசித்து இருக்கிறோம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் 50 உலகக் கோப்பை இறுதி போட்டி என இரண்டு தொடரிலும் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம்.

இந்த நல்ல நினைவுகளுடன் நாங்கள் பார்டர் கவாஸ்கர் தொடரிலும் விளையாடி இந்தியாவை வீழ்த்துவோம் என்று நம்புகிறேன். அது மட்டும் இல்லாமல் எங்களிடம் ஆஸ்திரேலிய மண்ணில் அடைந்த வெற்றியை அவர்களும் நினைவில் வைத்துக் கொள்வார்கள் என்று பாட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, October 16, 2024, 7:00 [IST]
Other articles published on Oct 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+