சச்சினை மட்டும் உயர்த்தி மற்றவர்களை தாழ்த்த கூடாது- மைக் ஆதர்டன்

இதுகுறித்து டைம்ஸ் இதழில் அவர் எழுதியுள்ள கட்டுரை...
சச்சின் டெண்டுல்கர் 20 ஆண்டு கிரிக்கெட் விளையாடியுள்ளார். பல்வேறு கிரிக்கெட் சாதனைகளைப் படைத்துள்ளார். இதை யாரும் மறுக்க முடியாது. அவர் ஒரு சிறந்த வீரர் என்பதை உலகமே ஒப்புக்கொண்டுள்ளது.
அதே நேரத்தில் அவர் மட்டும்தான் சிறந்த வீரர் என்று கூறக்கூடாது. அவரைப் போலவே சிறந்த கிரிக்கெட் வீரர்களை கண்ட உலகம் இது.
சச்சின் மட்டுமே சிறந்த வீரர் என்று சொல்வதால் கிரிக்கெட் உலகில் வேறு சிறந்த வீரர்களே இல்லை என்று அர்த்தமாகிவிடும்.
தற்போதுள்ள பேட்ஸ்மேன்கள் நவீன பாதுகாப்பு சாதனங்களை அணிந்து கொண்டு கிரிக்கெட் விளையாடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு அடிபடுமோ என்ற பயம் இல்லை. ஆனால் முந்தைய காலங்களில் பாதுகாப்பு சாதனங்கள் இல்லை. சிறிது ஏமாந்தாலும் கூட பந்து பேட்ஸ்மேன்களைத் தாக்கி அவர்களை நிலைகுலையச் செய்துவிடும்.
நவீன பாதுகாப்பு சாதனங்களை அணிந்துகொண்டுதான் சச்ன் விளையாடுகிறார். அதற்காக அவர் தைரியமற்றவர் என்று கூறவில்லை. அவர் தனது முதல் டெஸ்டிலேயே முகத்தில் அடிபட்டபோதும் எந்தவித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளால் விளையாடியவர்தான்.
ஆனால் ஹெல்மெட் இல்லாமல் சச்சின் விளையாடுவல்லை. ஹெல்மெட் இல்லாமல் விளையாடினால் அவரால் ஆடுகளத்தில் இயல்பாக ஆடமுடியாது என்று ஆதர்டன் கூறியுள்ளார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:33 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications