Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரொம்ப பிரேக் ஆயிடுச்சு... துவக்க வீரரா ரோகித் விளையாடறது டவுட்தான் -எம்எஸ்கே பிரசாத்

டெல்லி : இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான 3வது போட்டி வரும் 7ம் தேதி சிட்னியில் துவங்கவுள்ள நிலையில், அதில் ரோகித் சர்மா பங்கேற்று விளையாடவுள்ளார்.

இதையொட்டி தனது குவாரன்டைனை முடித்துவிட்டு நேற்றைய தினம் அவர் இந்திய அணியில் மீண்டும் இணைந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு அதிகமான பிரேக் உருவாகியுள்ளதால் மீண்டும் துவக்க வீரராக களமிறங்குவது சந்தேகம்தான் என்று முன்னாள் தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

3வது டெஸ்ட் போட்டி

3வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 7ம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்கவுள்ள நிலையில், அவர் துவக்க வீரராகவே விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாற்றத்தை விரும்பாத நிர்வாகம்

மாற்றத்தை விரும்பாத நிர்வாகம்

தற்போது இந்திய அணியின் துவக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் விளையாடி வருகின்றனர். இரண்டு போட்டிகளிலும் மயங்க் அகர்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும், இந்த இணையில் எந்த மாற்றத்தையும் அணி ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.

மிடில் ஆர்டரில் ரோகித்?

மிடில் ஆர்டரில் ரோகித்?

மிடில் ஆர்டரில் ஆடிவந்த ரோகித் சர்மா, கடந்த ஆண்டிலிருந்து துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் மீண்டும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மிடில் ஆர்டரில் ஆடவைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துவக்க வீரராக ஆடுவது சந்தேகம்

துவக்க வீரராக ஆடுவது சந்தேகம்

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக ரோகித் சர்மாவிற்கு நீண்ட இடைவெளி ஏற்பட்டுள்ளதால் அவர் மீண்டும் துவக்க வீரராக விளையாடுவது சந்தேகம் தான் என்று முன்னாள் தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். அவர் எந்த இடத்தில் விளையாடுவார் என்பதை அவரும் அணியும்தான் சூழ்நிலைக்கு ஏற்ப தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Thursday, December 31, 2020, 11:50 [IST]
Other articles published on Dec 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+