Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின், விராட் கோலி இல்ல.. இந்த கேகேஆர் வீரர் தான் ஆல் டைம் சிறந்த வீரர்.. பிரெட் லீ பாராட்டு

மும்பை: ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ, கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த வீரர் யார் என்ற விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரை வரலாற்றின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்றும், தென்னாப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸை மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்றும் அவர் தேர்வு செய்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 310 டெஸ்ட் விக்கெட்டுகள், 380 ஒருநாள் விக்கெட்டுகள் மற்றும் 28 டி20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ப்ரெட் லீ, காலிஸின் புள்ளிவிவரங்கள் உலகிலேயே மிகச்சிறந்தவை என்று பாராட்டியுள்ளார். 1995 முதல் 2014 வரை தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடிய ஜாக் காலிஸ், டெஸ்ட் போட்டிகளில் 13,289 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 11,579 ரன்களும் குவித்துள்ளார்.

Brett Lee

பந்துவீச்சில் 292 டெஸ்ட் விக்கெட்டுகளையும், 273 ஒருநாள் விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். மேலும், 25 டி20 போட்டிகளில் விளையாடி 666 ரன்களுடன் 12 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.மறுபுறம், 24 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடிய சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார்.

ரஷித் கான் மாபெரும் சாதனை.. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சுழற்பந்துவீச்சாளர் என கருத்து

ரஷித் கான் மாபெரும் சாதனை.. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சுழற்பந்துவீச்சாளர் என கருத்து

"தி ரன்வீர் ஷோ" நிகழ்ச்சியில் பேசிய பிரெட் லீ, "கிரிக்கெட் வரலாற்றில் விளையாடிய மிகச்சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் என்று நான் நினைக்கிறேன். ஆனால், என்னைப் பொறுத்தவரை மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் ஜாக் காலிஸ் தான். அவருடைய புள்ளிவிவரங்களை நீங்கள் பார்த்தால், உலகிலேயே மிகச்சிறந்த எண்களை அவர் கொண்டுள்ளார் என்பது புரியும். புள்ளிவிவரங்கள் ஒருபோதும் பொய் சொல்லாது. அவர் உண்மையிலேயே ஒரு அசாதாரணமான வீரர்" என்று கூறினார்.

IND vs SL: சாய் சுதர்சன் விலகல்.. 2 சிஎஸ்கே வீரர்கள் உள்பட 3 வீரர்கள் இடையே கடும் போட்டி

Also Read

IND vs SL: சாய் சுதர்சன் விலகல்.. 2 சிஎஸ்கே வீரர்கள் உள்பட 3 வீரர்கள் இடையே கடும் போட்டி

ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய காலத்தில், சச்சின் மற்றும் காலிஸ் ஆகிய இருவருக்கு எதிராகவும் பல போட்டிகளில் விளையாடி லீ நல்ல வெற்றியைப் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிய போது காலிஸுடன் லீ டிரஸ்ஸிங் ரூமப் பகிர்ந்து கொண்டுள்ளார். கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி 2012 இல் சாம்பியன் பட்டம் வென்றபோது இவர்கள் இருவரும் அதே அணியில் விளையாடினர்.

Story first published: Sunday, August 9, 2026, 9:08 [IST]
Other articles published on Aug 9, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+