Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘இப்படி பண்ணா எப்படி டீம்ல எடுப்பாங்க’.. ரெய்னாவை சிஎஸ்கே ஏலத்தில் எடுக்காததற்கு இதுதான் காரணம்..

ஐபிஎல் மெகா ஏலத்தில் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா விலைப் போகவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அவரை ஏலம் கேட்கவில்லை.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களும், ரெய்னாவின் ரசிகர்களும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் ரெய்னாவை அணியில் எடுக்காததற்கு காரணத்தை நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டுல் வெளியிட்டுள்ளார்.

காரணம்

காரணம்

ரெய்னா ஒரு சிறந்த வீரராக இருக்கலாம். ஆனால் தோனியின் நம்பிக்கையை அவர் இழந்துவிட்டார். 2020ஆம் ஆண்டு அணியிலிருந்து அவர் பாதியிலேயே விலகினார். இதனால் அவர் மீதான நம்பிக்கை தோனிக்கும், அணி நிர்வாகத்துக்கும் போய்விட்டது..

பிரச்சினை

பிரச்சினை

உங்கள் மீது நம்பிக்கை போய்விட்டால், பின்னர் யாரும் உங்களை நம்பி மீண்டும் அணியில் சேர்க்க மாட்டார்கள். ரெய்னா தனிப்பட்ட காரணத்திற்காக அணியிலிருந்து விலகியதாக கூறினாலும், அது தான் பிரச்சினைக்கு காரணம். அதன் பின்னர் வாய்ப்பு வழங்கப்பட்டும், அவர் அதனை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.

காயம்

காயம்

கடந்த சீசனின் முதல் பாதியில் ரன் எடுக்க ரெய்னா திணறினார்,. பின்னர் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதால் எஞ்சிய போட்டியில் விளையாடவில்லை. இது போன்ற மேலும் சில காரணங்கள் இருக்கின்றன என்று அவர் கூறினார். சென்னை அணிக்காக அதிக ரன்கள், அதிக அரைசதம், நாக் அவுட் சுற்றில் அதிக ரன்கள் என பல்வேறு சாதனைகளை ரெய்னா படைத்திருந்தார்.

Recommended Video

Suresh Raina Emotional Interview After Being Unsold In IPL auction 2022 | Oneindia Tamil
குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

எனினும் அணியின் எதிர்கால திட்டத்தில் ரெய்னாவின் பங்கு இல்லை என்பதால் தான் ரெய்னாவை ஏலத்தில் எடுக்கவில்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ..ஓ., கூறினார். சென்னை அணி எடுக்கவில்லை என்றாலும், மற்ற அணிகள் யாரும் எடுக்காதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Story first published: Thursday, February 17, 2022, 19:11 [IST]
Other articles published on Feb 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+