Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொஞ்சம் கூட நகராத ஜடேஜா.. கடுப்பாகி கத்திய நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் பல விமர்சனங்கள் இருந்தது.

நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவை விராட் கோலி ரன் அவுட் ஆக்கியது, விராட் கோலி சதம் அடிக்க வேண்டும் என்பதற்காக சிங்கிள் ஓட மறுத்தது போன்ற பல விஷயங்கள் நேற்றைய ஆட்டத்தில் விவாதத்தை கிளப்பியது.

NZ Player Glenn Philips angry on jadeja for disrupting fielding

இந்த நிலையில் நேற்று ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் ஜடேஜா செய்த ஒரு காரியத்தால் நியூசிலாந்து வீரர் கிளன் பிலிப்ஸ் கடுப்பாகி கத்தினார்.பொதுவாக ஃபில்டர்களை தடுக்கும் வகையில் பேட்ஸ்மேன்கள் செயல்பட்டால் பீல்டிங் செய்யும் வரை அதற்கு அவுட் கேட்கலாம். இதற்கு கிரிக்கெட் விதிகளில் இடம் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் பவுலர்கள் முனையில் நான் -ஸ்ட்ரைக்கரில் நிற்கும் போது இந்த விதியை பின்பற்றுவதில்லை.

இது தொடர்பாக நடுவரும் கண்டு கொள்வதில்லை. நேற்று இப்படி ஒரு சம்பவம் தான் நடந்தது. கிளான் பிலிப்ஸ் வீசிய பந்தை விராட் கோலி நேராக அடித்தார். அந்த பந்து ஜடேஜா அருகே வந்தது. அந்த பந்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக பிலிப்ஸ் பாய்ந்தார். ஆனால் ஜடேஜா , பிலிப்சை தடுக்கும் விதமாக தாம் நின்ற இடத்தில் இருந்து நகரவே இல்லை.

இதனால் பந்தை அவர் பிடிக்க முடியவில்லை. பந்து பவுண்டரி நோக்கி சென்றவுடன், ஜடேஜா சிங்கிள்ஸ் எடுத்துக் கொண்டார். இதனால் கடுப்பான பிலிப்ஸ் சத்தமாக கத்தி தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார். இந்த சிங்கிள்ஸ் எடுத்ததன் காரணமாகவே விராட் கோலி அடுத்த ஓவரில் பேட்டிங் செய்தார்.கிரிக்கெட் விதிப்படி இது தவறு என்றாலும் வீரர்களின் புத்திசாலித்தனமாக இது பார்க்கப்படுகிறது.

நல்ல எடுத்துக்காட்டு சொல்ல வேண்டுமென்றால் 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டியில் விராட் கோலி அடித்த பந்து எதிர்முனையில் நின்ற கம்பீரிடம் சென்றது. ஆனால் அவர் நகர்ந்து விட்டதால் தில்சன் அதனை கேட்ச் ஆக பிடித்து விடுவார். ஆனால் கம்பீர் அதே இடத்தில் நின்று இருந்தால் கூட நடுவர்களால் நடவடிக்கை எடுத்திருக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, October 23, 2023, 13:52 [IST]
Other articles published on Oct 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+