Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

NZ vs WI: 3வது ஒருநாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் தோல்வி.. தொடரை முழுமையாக வென்ற நியூசிலாந்து

ஹாமில்டன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இருக்கிறது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 5 டி20, மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் டி20 தொடரை நியூசிலாந்து அணி மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்ற ஒரு நாள் தொடர் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் நியூசிலாந்து வென்று இருந்தது. இந்த நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி ஹாமில்டன் நகரில் நடைபெற்றது.

NZ vs WI

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக விளையாடிய ஜான் கேம்பல் 26 ரன்களிலும், அக்கீம் ஆகஸ்ட் 17 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். கேசி கார்டீ டக் அவுட்டாக, கேப்டன் ஷாய் ஹோப் 16 ரன்களிலும், ரூத்தர் ஃபோர்ட் 19 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். நடுவரிசையில் ராஸ்டன் சேஸ் மட்டும் அதிகபட்சமாக 38 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

கீழ் வரிசையில் கேரி பியர் மட்டும் 22 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 36.2 ஓவர்களில் 161 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முன்னாள் சிஎஸ்கே வீரர் மேட் ஹென்றி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதை அடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. நியூசிலாந்து அணியின் முன்வரிசை வீரர்களான கான்வே, ரச்சின் ரவீந்திரா மற்றும் வில் யங் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் அந்த அணி 32 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது. எனினும் நடுவரிசையில் மார்க் சாப்மேன் மற்றும் மைக்கில் பிரேஸ்வெல் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்த ஜோடி நிதானமாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நெருக்கடி கொடுத்தது.

மார்க் சாப்மேன் 64 ரன்களில் ஆட்டம் இழக்க கேப்டன் மிட்செல் சாட்னர் 9 ரன்களில் வெளியேறினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு லேசாக வெற்றியின் கதவு திறந்தது. எனினும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்ற மைக்கில் பிரேஸ்வல் 31 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 30.3 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி வெற்றி இலக்கை எட்டியது.

வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு தரப்பில், ஜெய்டன் சில்ஸ்,மேத்தீவ் போர்டி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர். தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 2ஆம் தேதி தொடங்குகிறது இதற்கு முன்பு வரும் 26 ஆம் தேதி மூன்று நாள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடுகிறது.

Story first published: Saturday, November 22, 2025, 13:14 [IST]
Other articles published on Nov 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+