For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

NZ vs WI: 8 விக்கெட் போனாலும் விட மாட்டோம்.. உலக சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸின் ரொமாரியோ - ஷாமர்

நெல்சன்: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் போராடித் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் அந்த அணியின் வீரர்கள் ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் ஷமார் ஸ்பிரிங்கர், ஒன்பதாவது விக்கெட்டுக்கு பெரிய அளவில் ரன் குவித்து சர்வதேச டி20 போட்டியில் வரலாற்று சாதனை படைத்தனர்.

நியூசிலாந்து நாட்டின் நெல்சனில் உள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 178 ரன்கள் என்ற வெற்றி இலக்கைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணி 12.3 ஓவர்களில் வெறும் 88 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் இருந்தது.

NZ vs WI Romario Shepherd Shamar Springer Smash World Record Partnership in T20I Loss to New Zealand

வெஸ்ட் இண்டீஸ் அணி படுதோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில், ஒன்பதாவது விக்கெட்டுக்காகக் களமிறங்கிய ஆல்-ரவுண்டர் ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஸ்பிரிங்கர் ஜோடி, யாரும் எதிர்பாராத ஒரு ஆட்டத்தை ஆடியது. நியூசிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த இந்த ஜோடி, போட்டியை வெஸ்ட் இண்டீஸ் பக்கம் திருப்பியது. ஷெப்பர்ட் 34 பந்துகளில் 49 ரன்களும், ஸ்பிரிங்கர் 20 பந்துகளில் 39 ரன்களும் விளாசி ரசிகர்களுக்கு விருந்தளித்தனர்.

புதிய உலக சாதனை:

இந்த ஜோடி ஒன்பதாவது விக்கெட்டுக்காக 78 ரன்கள் குவித்தது. இதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒன்பதாவது மற்றும் பத்தாவது விக்கெட்டுக்கான அதிகபட்ச பார்ட்னர்ஷிப் என்ற புதிய உலக சாதனையை இவர்கள் படைத்தனர்.

இதற்கு முன்னர், 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அகீல் ஹொசைனுடன் இணைந்து ரொமாரியோ ஷெப்பர்ட் 72 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. டி20 கிரிக்கெட்டில் 9-வது அல்லது 10-வது விக்கெட்டுக்கான முதல் ஐந்து பெரிய பார்ட்னர்ஷிப்களில் மூன்றில் ரொமாரியோ ஷெப்பர்ட் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டி20 போட்டிகளில் 9வது அல்லது 10வது விக்கெட்டுக்கான அதிகபட்ச பார்ட்னர்ஷிப்கள்:

  • 78 ரன்கள் - ரொமாரியோ ஷெப்பர்ட், ஷமார் ஸ்பிரிங்கர் (வெஸ்ட் இண்டீஸ்) vs நியூசிலாந்து, 2025.
  • 72 ரன்கள்* - ரொமாரியோ ஷெப்பர்ட், அகீல் ஹொசைன் (வெஸ்ட் இண்டீஸ்) vs இங்கிலாந்து, 2022.
  • 66 ரன்கள் - டுவைன் பிராவோ, ஜெரோம் டெய்லர் (வெஸ்ட் இண்டீஸ்) vs பாகிஸ்தான், 2016.

வெஸ்ட் இண்டீஸ் தோல்வி:

இந்த ஜோடியின் அதிரடியால், கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்குச் 12 ரன்களே தேவைப்பட்டது. ஆனால், பரபரப்பான இறுதி ஓவரில் ஜேமிசன் பந்துவீச்சில் ஷெப்பர்ட் ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தப் போட்டியில் தோல்வியடைந்தாலும், 9வது விக்கெட்டுக்காகப் போராடி வரலாற்று சாதனை படைத்த ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் ஷமார் ஸ்பிரிங்கர் ஜோடியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Story first published: Monday, November 10, 2025, 10:08 [IST]
Other articles published on Nov 10, 2025
English summary
NZ vs WI: Romario Shepherd, Shamar Springer Smash World Record Partnership in T20I Loss to New Zealand
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+