Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அறிமுகமான முதல் மேட்ச்.. எகிறிய ஸ்டெம்ப்புகள்.. ஆடிப்போன கேப்டன் ரூட் - நோட் பண்ணுங்க கோலி

லண்டன்: சீனியர் வீரர்களே விக்கெட்டுகள் எடுக்க தடுமாறிய போது, அறிமுகமான முதல் மேட்சிலேயே ஸ்டெம்ப்புகளை அசத்தியிருக்கிறார் இங்கிலாந்து இளம் பவுலர்.

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி, லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது.

இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து, முதலில் பேட்டிங்கை செய்தது. இங்

8- 9 நாட்களாக தூங்கல.. கிரிக்கெட்டே போச்சினு நினச்ச.. ஐபிஎல்-ல் சந்தித்த வேதனைகள்..அஸ்வின் ஓபன் டாக்கிலாந்து அணியில் ஓலே ராபின்சன் மற்றும் ஜேம்ஸ் பிரேஸே ஆகியோருக்கு முதன் முதலாக டெஸ்ட் கிரிக்கெட் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியில், டிரெண்ட் போல்ட் அணியில் சேர்க்கப்படவில்லை.

 தடுமாறிய இங்கிலாந்து

தடுமாறிய இங்கிலாந்து

இந்த நிலையில், நியூசிலாந்து அணியில் டாம் லாதம், டெவோன் கான்வே தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், முதல் நாள் ஆட்டத்தின் முதல் 'ட்ரிங்க்ஸ்' வேளை வரை, இங்கிலாந்தால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை. ட்ரிங்க்ஸ் இடைவேளை வரை மொத்தம் 13 ஓவர்கள் வீசப்பட்டிருந்தது. ஸ்கோர் 47-0. ஒரு விக்கெட் கூட விழாமல் இருந்தது.

விக்கெட்

விக்கெட்

இந்த நிலையில், இன்றைய போட்டியில் அறிமுக செய்யப்பட்ட ஓலே ராபின்சன், 'நங்கூரம்' பாய்ச்சி ஆடி வந்த டாம் லாதமை போல்டாக்கினார். ஆஃப் ஸ்டெம்ப்புக்கு வந்த பந்தை டிஃபன்ஸ் ஆட முயன்ற போது, பந்து இன்சைட் எட்ஜ் ஆகி போல்டானார். இதன் மூலம், தனது முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்சிலேயே முதல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

 ஷார்ட் பந்துகள் எங்கே?

ஷார்ட் பந்துகள் எங்கே?

சீனியர் பவுலர்களான ஆண்டர்சன், பிராட் பந்துவீச்சில் பெரிதாக எந்த தாக்கமும் இல்லை. விக்கெட்டுகளை எய்ம் செய்து அவர்கள் பந்துவீசியது போன்று தெரியவில்லை. பெரும்பாலான பந்துகள் லைனுக்கு வெளியே சென்றன. இதனால், நியூசிலாந்து ஓப்பனர்கள், பெரிதாக இன்டரஹ சிரமமும் இன்றி அவர்களை எதிர்கொண்டனர். இன்னும் சொல்லப்போனால், அவர்கள் ஷார்ட் பந்துகள் கூட அதிகமாக ட்ரை பன்ணவில்லை.

 இந்தியாவுக்கு சவால்

இந்தியாவுக்கு சவால்

எனினும், ஒரு விக்கெட் விழுந்த பிறகு பவுலிங் செய்ய வந்த மார்க் வுட் வரிசையாக ஷார்ட் பந்துகளை வீசி, நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார். ஓலே ராபின்சன் ஆஃப் ஸ்டெம்ப்பை குறி வைத்து அதிகம் பந்துவீசி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில், மார்க் வுட் பந்தை தான் இந்திய பேட்ஸ்மேன்கள் திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

Story first published: Wednesday, June 2, 2021, 21:04 [IST]
Other articles published on Jun 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+