Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

8- 9 நாட்களாக தூங்கல.. கிரிக்கெட்டே போச்சினு நினச்ச.. ஐபிஎல்-ல் சந்தித்த வேதனைகள்..அஸ்வின் ஓபன் டாக்

மும்பை: ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதற்கு முன்பு வரை தான் பட்ட வேதனைகள் குறித்தும் தமிழக வீரர் அஸ்வின் மனம் திறந்துள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரில் திடீரென கொரோனா வேகமாக பரவியது. இதனையடுத்து கடந்த மே.4ம் தேதி தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஏப்ரல் 26ம் தேதியே டெல்லி அணியின் மூத்த ஸ்பின் பவுலர் அஸ்வின், தொடரில் இருந்து பிரேக் எடுக்க போவதாக அறிவித்தார்.

தொடரில் இருந்து விலகல்

தொடரில் இருந்து விலகல்

அப்போது தனது நிலைமை குறித்து ட்விட்டர் பக்கத்தில் அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின், தனது குடும்ப உறுப்பினர்களும், தூரத்து உறவினர்களும் கொரோனா பாதிப்பில் சிக்கியுள்ளதால் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கப்போவதாக தெரிவித்திருந்தார். இவர் செல்வதற்கு டெல்லி அணி நிர்வாகமும் தனது ஆதரவை கொடுத்தது.

மன அழுத்தம்

மன அழுத்தம்

இந்நிலையில் தனது ஐபிஎல் அனுபவங்களை அஸ்வின் மனம் திறந்துள்ளார். நான் இருக்கும் பகுதியில் கிட்டத்தட்ட அனைவருக்கும் கொரோனா பாதித்தது. என்னுடைய சகோதரர்கள் கூட கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் நான் ஐபிஎல் தொடரின் போது 8-9 நாட்களாக தூங்கவில்லை. தூக்கமின்றி போட்டிகளில் விளையாடியது எனக்கு மிகவும் மன அழுத்தத்தை கொடுத்தது. அதன் பின்னர் தான் நான் ஐபிஎல்-ல் இருந்து விலகலாம் என முடிவெடுத்தேன்.

இனி கிரிக்கெட் ஆடுவேனா?

இனி கிரிக்கெட் ஆடுவேனா?

நான் ஐபிஎல்-ஐ விட்டு பாதியில் வெளியேறினால், என் வாழ்க்கையில் இனி விளையாட வாய்ப்புகள் இருக்குமா என்ற கேள்வியும் என்னிடம் எழுந்தது. ஆனால் அந்த இக்கட்டான சூழலுக்கு ஏற்ப நான் செயல்படவேண்டியிருந்தது. ஆனால் எனது குடும்பத்தினர் குணமடைந்து, நான் போட்டிக்கு திரும்பலாம் என நினைத்த போது சரியாக ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

பபுள்

பபுள்

ரசிகர்கள் பலரும் அணிகளின் பபுள்கள் உடைந்தது என்றால் வெளியாட்கள் பபுளுக்குள் நுழைந்ததாக அர்த்தம் அல்ல. அது ஒரு வைரஸ், அது எங்கிருந்து, எப்படி பபுளுக்குள் நுழைகிறது என்பது யாருக்கும் தெரியாது. எனவே பபுள் உடைந்துவிட்டது என்றால் யாரேனும் உள்ளே நுழைந்துவிட்டார்கள் என்று அர்த்தம் அல்ல என அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.

Story first published: Thursday, May 27, 2021, 20:12 [IST]
Other articles published on May 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+