வாட்சனுக்கு கேக் ஊட்டிய ஏர் ஹோஸ்டஸ்.. தூங்கி வழிந்த தோனி.. சென்னை வரும் வழியில் நடந்த சுவாரசியம்!
Recommended Video

சென்னை: சென்னை அணி ஐபிஎல் கோப்பை வென்றதை அடுத்து சென்னை வரும் போது விமானத்தில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்துள்ளது.
சென்னை அணிக்கும், ஹைதராபாத் அணிக்கும் இடையில் நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை மிகவும் எளிதாக வாட்சன் அதிரடியில் வெற்றிபெற்றது. இதில் வாட்சன் அதிரடியாக ஆடி சதம் அடித்தார்.
முதலில் களமிறங்கிய ஹைதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட்டிற்கு 178 ரன்கள் எடுத்தது. சென்னை எளிதாக இலக்கை அடைந்து வெற்றிபெற்றுள்ளது.

விமானம் மூலம் சென்னை வந்தனர்
இதையடுத்து நேற்று சிஎஸ்கே வீரர்கள் இந்த வெற்றியை சென்னையில் கொண்டாடினார்கள். சென்னைக்கு சிறப்பு விமானம் மூலம் வந்தனர். பல முக்கிய நபர்கள் அரசியல்வாதிகள் இதில் கலந்து கொண்டனர். சென்னையில் தனியார் மாளிகையில் பெரிய அளவில் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

கோப்பை வைத்து கொண்டாடினர்
இதில் கோப்பையை வாங்கி விமானிகள் கொண்டாடினார்கள். விமானிகள் கோப்பையுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர். அதன்பின் விமான பணிப்பெண்கள் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மஞ்சள் கேக்
இதில் சென்னையின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் கேக் வெட்டப்பட்டது. இதற்காக மஞ்சள் நிற கேக் செய்யப்பட்டு இருந்தது. இதில் எல்லா வீரர்களுக்கும் கேக் ஊட்டிவிடப்பட்டது. பிராவோ, வாட்சன் இதை மற்றவர்கள் மீது பூசி விளையாடிக் கொண்டு இருந்தனர்.

தோனி
எப்போதும் கொண்டாட்டம் என்றால் வீடியோ எடுத்து வெளியிடும் தோனி இந்த முறை அமைதியாகிவிட்டார். வெற்றி களைப்பில் அப்படியே தூங்கி இருக்கிறார். இவர் தூங்கி வழியும் புகைப்படம் வெளியாகி வைரலாகி உள்ளது.


Click it and Unblock the Notifications