Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2005ல் நடந்த சம்பவம்.. இதேநாளில் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்த சச்சின்.. மறக்க முடியுமா?!

டெல்லி: கடந்த 2005ல் இதேநாளில் தன்னுடைய 35வது சதத்தை அடித்ததன்மூலம் சச்சின் டெண்டுல்கர், முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்தார்.

கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளை புரிந்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்துள்ள 51 சதங்கள் தற்போதுவரை முறியடிக்கப்படவில்லை.

இதேபோல ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் அடித்துள்ள 49 சதங்களை முறியடிக்கும் முயற்சியில் கேப்டன் விராட் கோலி முனைப்புடன் உள்ளார்.

சாதனைகளின் சொந்தக்காரர்

சாதனைகளின் சொந்தக்காரர்

கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். இவரது சில சாதனைகள் இன்னும் முறியடிக்கப்படாமல் உள்ளது.

கவாஸ்கர் சாதனை முறியடிப்பு

கவாஸ்கர் சாதனை முறியடிப்பு

இந்நிலையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2005ல் இதே நாளில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரின் சாதனையை தனது 35வது சதத்தை அடித்ததன் மூலம் சச்சின் முறியடித்தார்.

35வது சதத்தை விளாசிய சச்சின்

35வது சதத்தை விளாசிய சச்சின்

கடந்த 2005ல் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் தன்னுடைய 35வது சதத்தை நிறைவு செய்தார் சச்சின் டெண்டுல்கர். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் 35 சதத்தை அடித்திருந்த சுனில் கவாஸ்கரின் சாதனை முறியடிக்கப்பட்டது.

கங்குலி, லக்ஷமனுடன் பார்ட்னர்ஷிப்

கங்குலி, லக்ஷமனுடன் பார்ட்னர்ஷிப்

13 பவுண்டரிகள், ஒரு சிக்ஸுடன் இந்த சாதனையை அவர் நிகழ்த்தினார். மேலும் சவுரவ் கங்குலி மற்றும் விவிஎஸ் லஷ்மன் ஆகியோருடன் பார்ட்னர்ஷிப்பில் கவாஸ்கரின் சாதனையை சச்சின் முறியடித்தார்.

முறியடிக்கப்படாத சச்சினின் சாதனை

முறியடிக்கப்படாத சச்சினின் சாதனை

தனது கிரிக்கெட் பயணத்தில் டெஸ்ட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 51 சதங்களை அடித்துள்ளார். அவரது சாதனை இதுவரை முறியடிக்கப்படாமல் உள்ளது.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 49 சதம்

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 49 சதம்

தன்னுடைய கிரிக்கெட் பயணத்தில் சச்சின் 100 சதங்களை அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களும் அவர் அடித்துள்ளார். 43 சதங்களுடன் சச்சினின் சாதனையை முறியடிக்க கேப்டன் விராட் கோலி காத்துள்ளார்.

Story first published: Tuesday, December 10, 2019, 14:11 [IST]
Other articles published on Dec 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+